தமிழகத்தில் சிங்களவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி வரும் சிங்களர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் இலங்கை விமான நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.
ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், மிஹின் லங்கா ஆகிய விமான நிறுவனங்கள் தமிழகத்துக்கு விமான சேவையை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் திருச்சிக்கான தமது விமான சேவையை மேலும் விரிவாக்கத் திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் சிங்களர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ், மிஹின் ஏயார் லைன்ஸ் ஆகியவற்றின் வருமானம் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இந்தியாவுக்கு வரும் சிங்களவர் முதலில் கொழும்பிலிருந்து திருச்சிக்கு பயணமாகினர். இவர்கள் பின்னர் திருச்சியிலிருந்து பௌத்த தலங்களான புத்தகாயா, சர்னாத் ஆகிய பகுதிகளுக்கும் சென்றனர். இப்போது இவர்கள் கொழும்பிலிருந்து திருச்சி செல்லும் திருவனந்தபுரம் விமானத்தில் செல்வதாகக் கூறப்படுகிறது.
இதேபோல கொழும்புக்கு வரும் தமிழ்நாட்டு சுற்றுலாப் பயணிகள் இப்போது சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூருக்கு செல்கின்றனர். இதனால் இலங்கை சுற்றுலாத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment