வியாபாரியை கொல்ல முயன்ற கூலிப்படையை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி அடித்து உதைத்தனர். வேலூர் அடுத்த சலமநத்தம், ஆற்காடு சாலையை சேர்ந்தவர் பிரகாஷ் என்ற சின்னராஜ் (வயது 32). இவர் அப்பகுதியில் பெட்டிக் கடை மற்றும் ஹோட்டல் வைத்துள்ளார். இதே பகுதியில் பேங்க் தெருவை சேர்ந்தவர் திலகராஜ் (39). கருங்காலிக் குப்பம் ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சின்ன ராஜூக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சின்னராஜை கொலை செய்வதற்காக வேலூர் தோட்டப்பாளையம் தினேஷ் (23), சேண்பாக்கம் சிவமணி (23), சைதாப்பேட்டை ஜெகன் (23) ஆகியோரை ஆசிரியர் திலகராஜ் ஏவியுள்ளார். கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி கூலிப்படையை சேர்ந்த இவர்கள் மூவரும் சின்னராஜ் கடைக்கு சென்று நேற்று இரவு தகராறு செய்தனர். அவரை கத்தியால் குத்த முயன்ற போது சின்னராஜின் தாயார் இந்திராணி (65) தனது மகனை கட்டி பிடித்து காப்பாற்றினார். இதில் சின்னராஜூம், இந்திராணியும் காயம் அடைந்தனர். அதற்குள் அருகில் இருந்த பொதுமக்கள் சுதாரித்துக் கொண்டு கூலிப்படையை மடக்கி பிடித்தனர். தினேஷ் மற்றும் சிவமணி பொதுமக்களிடம் சிக்கினர். ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர். விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.
இந்நிலையில் கூலிப்படை ஏவிய ஆசிரியரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை எற்பட்டது. இதனால் போலீசார் ஆசிரியர் திலகராஜையும் கைது செய்தனர்.
மேலும் கொலை முயற்சியில் ஈடுபட்ட சலமநத்தம் மேட்டுத் தெருவை சேர்ந்த சந்தோஷ் (23), சைதாப்பேட்டை ஜெகன் (23) ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment