இலங்கையில் நடக்க உள்ள 20 ஓவர் உலககோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய சீருடை கடந்த மாதம் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு தனித்தனி சீரூடைகள் இருப்பதுபோல் இனிமேல் 20 ஓவர் போட்டிகளில் இந்திய வீரர்கள் இந்த புதிய சீருடையை அணிந்து ஆடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய சீருடையின் இடது தோள்பட்டைக்கு கீழே இந்தியாவின் தேசியக் கொடியிலுள்ள மூன்று வண்ணங்களும் இடம் பெற்றிருந்தன. புதிய சீருடையை வரவேற்றுப் பேசிய இந்திய கேப்டன் மகேந்திரசிங் டோனி, ‘இது ஒரு நல்ல துவக்கம். மக்கள் டி.வி.யில் சேனலை மாற்றும்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை தனித்தனியே அடையாளம் கண்டுகொள்வது போல இனிமேல் 20 ஓவர் போட்டிகளையும் அடையாளம் காணலாம்’ என்றார். அவ்விழாவில் பேசிய சேவாக், ‘இதயத்திற்கு அருகில் தேசியக்கொடியை பொறித்திருப்பது நல்ல சிந்தனை. அதன்மூலம் நாட்டிற்காக ஆடுகிறோம் என்ற எண்ணம் மேலோங்கும். வீரர்கள் சிறப்பாக ஆட அது உந்துதலாக இருக்கும்’ என்றார்.
இந்நிலையில் நடக்க இருக்கும் 20 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் புதிய சீருடையை அணிந்து விளையாடப் போவதில்லை என பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய அணியின் விளம்பரதாரரான நைக் நிறுவனத்தை தொடர்புகொண்டு, பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
இதனால் கடந்த ஆண்டு 50 ஓவர் உலககோப்பையை வென்றபோது அணிந்த, அதே சீருடையையே வர இருக்கும் 20 ஓவர் உலககோப்பை தொடரிலும் இந்திய வீரர்கள் அணிய உள்ளனர்.
No comments:
Post a Comment