உத்தர்காண்ட் மாநிலத்தில் திடீரென மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கொட்டித் தீர்த்த பெருமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. 27 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
உத்தர்காண்ட் மாநிலத்தில் இமயமலைப் பிரதேசமான ரூத் பிரயாக்கில் திடீரென மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டது. இதில் கொடித் தீர்த்த கனமழையில் பல கிராமங்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதில் இதுவரை 37 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 27 பேர் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். சாலைகள் முற்றிலும் நாசமடைந்து மின்விநியோகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சீரமைப்புப் பணிகளில் ராணுவம் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. நிவாரணப் பணிகளுக்காக ரூ10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மாநில அமைச்சர் யஷ்பால் ஆர்யா கூறியுள்ளார்.
இதனிடையே மற்றொரு இடத்தில் மீண்டும் மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கொட்டித்தீர்த்த கனமழையில் 5 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment