தமது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் மக்கள் நலத் திட்டப் பணிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் ஆலயத்து ரங்கநாதரை தரிசிக்க முடியாமல் திரும்பியிருக்கிறார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சில நாட்களுக்கு முன் முழுநாள் அன்னதானத் திட்டத்தைத் தொடங்கி வைத்த ஜெயலலிதா அவரே பாத்திரத்தை கையில் ஏந்தி உணவு பரிமாறியிருக்கிறார்.
ராசி எண் 7?
இந்த அன்னதானத் திட்டத்தில் ஒரு குட்டு வெளிப்பட்டு இருக்கிறது. இப்பொழுது ஜெயலலிதாவுக்கு ராசி எண் ஏழாம்! அதாவது 7 பேருக்கு 16 வகையான பதார்த்தங்களை பரிமாறி அன்னதானத் திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் ஜெயலலிதா. அதுமட்டுமல்ல. அன்னதானத்துக்காக காத்திருந்தோர் எண்ணிக்கையும் கூட 304.
ரங்கநாதரை தரிசிக்கலை..
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வாசல் வரை சென்ற ஜெயலலிதா ரங்கநாதரை தரிசிக்காமலேயே திரும்பிவிட்டார். இதுதான் பலருக்கும் ஹைலைட் ஆச்சரியம்! ஆனால் ஜெயலலிதா போகும்போது தைலக்க்காப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் இருந்திருக்கிறார். அப்படியானால் முகத்தை மட்டும்தான் தரிசிக்க முடியும். ஆனால் ரங்கநாதரை தரிசிக்கும் போது பாதத்தைத் தரிசித்துவிட்டு முகத்தை தரிசிப்பதே முறையான நடைமுறையாம்.அதனால்தான் ரங்கநாதரை ஜெயலலிதா "ஷேவிக்காமல்" போனாராம்..
No comments:
Post a Comment