ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பத்திரிகையான ஆர்கனைசர், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
அது கூறி இருப்பதாவது:-
ரஷியா உதவியுடனான கூடங்குளம் அணுமின் நிலையம், பிரான்ஸ் உதவியுடனான ஜெய்தாபூர் அனுமின் நிலையம் ஆகியவற்றை மூடுவதற்கு, அமெரிக்கா ஒரு பிரிவினரை தூண்டி போராட வைக்கிறது. அதற்காக, தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பணத்தை வாரி இறைக்கிறது. இதன் மூலம் போதிய பாதுகாப்பு அளிப்பதாக தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயல்கிறது.
கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக, ஊழலுக்கு எதிரான அமைப்பின் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னைக் காட்டிக் கொண்டு ஆஜராகி உள்ளார். இது, அவர் அரசியல் பிரவேசம் செய்ய திட்டமிட்டு இருப்பதன் ஒரு அங்கம் ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.எஸ்.எஸ் சொன்னா அது சரியாத்தான் இருக்கும்...........இந்த நாட்டைப்பத்திக் கவலைப் படுகிற அமைப்பு இது ஒன்னுதான்....
ReplyDelete