இலங்கை அதிபர் ராஜபக்சே வருகிற 21-ந்தேதி மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகருக்கு வருகிறார். அங்கு நடைபெறும் புத்த பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்கிறார். ராஜபக்சே இந்தியா வருகைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சாஞ்சி நகரில் ராஜபக்சேவுக்கு எதிராக வைகோ தலைமையில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ம.தி. மு.க. அறிவித்தது.
இந்த போராட்டத்தை கைவிடும் படி மத்திய பிரதேச முதல்- மந்திரி சிவராஜ்சிங் சவுகான் வைகோவை கேட்டுக் கொண்டார். ஆனால் வைகோ மறுத்து விட்டார். திட்டமிட்டப்படி 21-ந் தேதி சாஞ்சி நகரில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இன்று பிற்பகலில் சென்னை அண்ணா சமாதி முன்பிருந்து 15-க்கும் மேற்பட்ட பஸ்களில் வைகோ தலைமையில் தொண்டர்கள் புறப்பட்டு சென்றனர். அனைவரும் கறுப்பு கொடிகளுடன் சென்றனர். 21-ந்தேதி சாஞ்சியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

No comments:
Post a Comment