அரசியல் அனல்,
சொத்துக் குவிப்பு தீர்ப்புக் கனல்... இதற்குச் சமமாக கோடம்பாக்கத்தில் எகிறுகிறது
ரஜினியின் 'லிங்கா’
ஃபீவர்!
கே.எஸ்.ரவிக்குமார்
இயக்கத்தில் 'உடம்பை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் ஒரு படம்’ என்பது மட்டும்தான்
ரஜினியின் பிளான். அதைச் சுற்றி 'லிங்கா கோட்டை’ கட்டிவிட்டார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.
படத்தில் இரண்டு
ரஜினிகள். இருவருமே இளமைத் தோற்றத்தில்தான் வருவார்கள். ஆச்சர்யமாக, படத்தில் ரஜினிக்கு
பிரத்யேக 'பன்ச்’
டயலாக் இல்லையாம். ஆனால், கதையின் சூழலுக்குப் பொருத்தமான 'பன்ச்’கள் ஏராளம்; தாராளம்.
இன்ஜினீயர் ரஜினி அணை கட்டும்போது வரும் பிரச்னையில் அவருக்கு உதவ ஊர் மக்கள் தயங்கி
நிற்பார்கள். 'எனக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்டியன், நாடார், செட்டியார், தேவர்னு யாரும்
வேணாம்... 'இந்தியன்’
மட்டும் என்கூட அணை கட்ட வாங்க!’ என ரஜினி சொல்வது ஒரு சாம்பிள்!
தமிழ் சினிமாவில்
'பொங்கல் பாடல்’
வந்து மாமாங்கம் ஆகிவிட்டதே. அந்தக் குறையைப் போக்க, பொங்கல் விழாவுக்கு ரஜினியும்
சோனாக்ஷி சின்ஹாவும் ஆடும் கலகல டூயட் களைகட்டும்.
வழக்கமாக ரஜினி
பட ஓப்பனிங் ஸாங்கை எக்கச்சக்க ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் புடைசூழ பிரமாண்டமாகப் படம் பிடிப்பார்கள்.
அது பெரும்பாலும் ஆந்திரா அல்லது கர்நாடகா பகுதிகளில் நடக்கும். ஆனால் 'லிங்கா’வின் ஓப்பனிங் ஸாங்
வெளிநாட்டில் படமாகியிருக்கிறது.
கர்நாடகாவில் படப்பிடிப்பில்
இருந்தபோது ரஜினியைச் சந்தித்திருக்கிறார் தமிழக சேனல் உரிமையாளர் ஒருவர். 'லிங்கா’ படத்தைத் தன் பட நிறுவனமே
மொத்தமாக விலைக்கு வாங்கிக்கொள்வதாகவும், சாட்டிலைட் உரிமையையும் தனக்கே தர வேண்டும்
எனவும் ரஜினியிடம் கேட்டாராம். ஆனால் ரஜினி எந்த உறுதிமொழியும் தரவில்லையாம்.
படப்பிடிப்பு இடைவேளையில்
ரஜினியிடம் தான் இயக்கிக்கொண்டிருக்கும் 'வை ராஜா வை’ படத்தின் சில காட்சிகளைப் போட்டுக்காட்டி இருக்கிறார் அவர் மகள் ஐஸ்வர்யா.
'நல்லா பண்ணிருக்கேம்மா’ என ரஜினி முகம் மலர்ந்து பாராட்ட, 'அப்பா
உங்களை இயக்க, இன்னும் ஒரே ஒரு சான்ஸ் எனக்குக் கொடுங்க. டைரக்ஷன் நான், மியூசிக் அனிருத்.
மத்த ஆட்களெல்லாம் நீங்க சொல்றவங்கதான்!’ எனக் கோரிக்கை வைக்க 'பார்க்கலாம்மா...’ என்று
மட்டும் சொல்லிச் சிரித்திருக்கிறார் ரஜினி.
கர்நாடகாவில் இருந்த
ரஜினியை அந்த மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பி.ஜே.பி-யின் முன்னாள் மாநிலத்
தலைவர் ஈஸ்வரப்பா இருவரும் சந்தித்து நீண்டநேரம் பேசியிருக்கிறார்கள். அதன் பின்னரே
'பி.ஜே.பி-யில் ரஜினி’
என்ற செய்தி சூடு பிடித்தது.
தொடர்ந்து கர்நாடகாவில்
ஷூட்டிங்கில் இருந்தபோது, பேரன் லிங்காவை ரொம்பவே மிஸ் பண்ணியிருக்கிறார் ரஜினி. அதனால்
லிங்காவின் சேட்டைகளை ஐஸ்வர்யா வீடியோ எடுத்து அனுப்ப, அதை மீண்டும் மீண்டும் பார்த்து
மகிழ்கிறார்.
ரஜினியைச் சந்தித்த
பெங்களூரு ரஜினி ரசிகர் மன்ற பொறுப்பாளர் இளவரசன், 'நீங்க அரசியலுக்கு வரணும் தலைவா!’
எனச் சொல்ல, 'என்னை இந்த அளவுக்கு வளர்த்தவங்க நீங்கதான். உங்களுக்கு எதுவும் செய்யாம
நான் போயிட மாட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ எனப் பதில் கொடுத்திருக்கிறார்.
தற்போது நடக்கும்
அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்கும் போது எதுவும் நடக்காலாம் என்றே எண்ணத்தோன்றுகிறது
!!
உஙகள் blog நன்றாக உள்ளது.. தமிழ் வழியில் அணைத்து தகவல்களையும் கொடுத்து கொண்டு இருப்பது மிகவும் நன்றாக உள்ளது.. இதை இப்படியே தொடரவும்... நன்றி
ReplyDelete