விழியே பேசு...

  • Home
  • ஆன்மீகம்
  • செய்தி
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வீடியோ
  • பாடல்கள்
  • ட்ரெய்லர்

    Tuesday, October 21, 2014

    கத்தி: சுமூகத் தீர்வு இல்லை போராட்டம் உறுதி: வேல்முருகன்

    கத்தி திரைப்பட பிரச்சனையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக லைக்கா நிறுவனம் பொய்ச்செய்திகளை பரப்புகிறது. இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். லைக்கா தயாரிப்பான கத்தி திரைப்படத்தை எதிர்த்து வன்முறையற்ற அமைதி வழியில் போராட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன் கூறியுள்ளார்.

    ராஜபக்சே குடும்பத்தின் பினாமி நிறுவனமான லைக்கா விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கு தொடக்கம் முதல் 150க்கும் மேற்பட்ட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்து வருகிறது.

    இந்த நிலையில் கத்தி திரைப்பட விவகாரத்தில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுவிட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதனை மறுத்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:


    கத்தி: சுமூகத் தீர்வு இல்லை- படம் வெளியானால் 150 இயக்கம் சார்பில் போராட்டம் உறுதி: வேல்முருகன்

    இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் கத்தி திரைப்பட்ட பிரச்சனையில் சுமூக தீர்வு ஏற்பட்டுவிட்டதாக அந்நிறுவனமும் படக்குழுவினரும் விஷமத்தனமான செய்திகளை ஊடகங்களில் வெளியிட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கையை கத்தி திரைப்படக் குழு இதுவரை ஏற்கவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை "லைக்கா" நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் இலங்கைத் தமிழர் சுபாஷ்கரன்.

    ஆனால் இனப்படுகொலையாளனாகிய இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரி மகன் ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சிதான் லைக்காவின் உண்மையான உரிமையாளர். 2007ஆம் ஆண்டே லைக்கா குழுமத்துக்கு சொந்தமான தாய் நிறுவனமான ஹேஸ்டிங்ஸ் என்ற நிறுவனத்தை ராஜபக்சேவின் சகோதரி மகன் ஹிமல் லீலந்திர ஹெட்டியராச்சி வாங்கிவிட்டார்.

    இதற்கான ஆதாரங்களை இலங்கை நாட்டின் ஊடகங்கள் வெளியிட்டன. இந்த ஆதாரங்களை வெளியிட்டதற்காகவே சண்டே லீடர் என்ற இலங்கை ஊடகத்தின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார்.


    கத்தி: சுமூகத் தீர்வு இல்லை- படம் வெளியானால் 150 இயக்கம் சார்பில் போராட்டம் உறுதி: வேல்முருகன்

    இதனை அடிப்படையாகக் கொண்டே லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான உறவு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து நாட்டு எம்.பிக்கள் வலியுறுத்தினர். இது ஹப்பிங்டன் போஸ்ட் போன்ற சர்வதேச ஊடகங்களில் வெளிவந்த செய்திகளே.

    இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் குடும்பத்துக்குச் சொந்தமான லைக்கா நிறுவனம்தான் தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

    தமிழக சட்டமன்ற தீர்மானத்துக்கு எதிராக..

    ஏற்கெனவே இனப்படுகொலை போர்க்குற்றத்துக்காக ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்; இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் முன்மொழியப்பட்டு தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒப்புதலுடன் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் அடிப்படையில்தான் ராஜபக்சே குடும்பத்தினருக்கு சொந்தமான லைக்கா நிறுவனம், கத்தி திரைப்படத்தை தயாரிக்கக் கூடாது என்று 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி போராடி வருகிறது.

    இது இயக்குநர் முருகதாசுக்கோ, நடிகர் விஜய்க்கோ மற்ற கலைஞர்களுக்கோ எதிரானது அன்று. எங்களைப் பொறுத்தவரையில் இனப்படுகொலையாளன் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கக் கூடிய லைக்கா நிறுவனம் கத்தி உட்பட எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்தை தயாரிக்கக் கூடாது.

    கத்தி: சுமூகத் தீர்வு இல்லை- படம் வெளியானால் 150 இயக்கம் சார்பில் போராட்டம் உறுதி: வேல்முருகன்

    நாங்கள் வேறு எந்த தமிழ்த் தயாரிப்பு நிறுவனமும் திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவதை ஒருபோதும் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என்று பலமுறை அறிவித்திருந்தோம்.
    ஆனாலும் ஒட்டுமொத்த மொத்த தமிழகத்தின் வேண்டுகோளை ஏற்காமல் இனப்படுகொலையாளன் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம் விடாப்பிடியாக வேண்டுமென்றே திர்மித்தனமாக கத்தி திரைப்படத்தை தயாரித்து வெளியிடுவதில் தீவிரம்காட்டி வருகிறது.

    சுபாஷ்கரன் ஒப்புதல்

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன் வெளிப்படையாக, இலங்கை அரசுக்கு சொந்தமான இலங்கை ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகம் செய்கிறோம் என்று ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார். இந்த இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருப்பவர் ராஜபக்சேவின் சகோதரர் மகன் சமீந்திர ராஜபக்சே.

    இதே லைக்கா நிறுவனம்தான் தமிழக அரசு கடுமையாக எதிர்த்த கொழும்பு காமன்வெல்த் மாநாட்டின் கோல்டன் ஸ்பான்சராக இருந்ததுடன் இலங்கைக்கு பொருளாதாரத்தை ஈட்டித் தரக்கூடிய வகையிலான மாநாட்டையும் நடத்தியது. இம்மாநாட்டில் லைக்காவின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த காங்லியும் கலந்து கொண்டார்.

    இப்படி தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் "இலங்கை மீதான பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" என்ற தீர்மானத்தைத் தகர்க்கும் வகையில் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்தான் லைக்கா நிறுவனம் திட்டமிட்டே கத்தி திரைப்படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறது.


    கத்தி: சுமூகத் தீர்வு இல்லை- படம் வெளியானால் 150 இயக்கம் சார்பில் போராட்டம் உறுதி: வேல்முருகன்

    இதனால்தான் 150க்கும் மேற்பட்ட இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இதை கடுமையாக எதிர்க்கிறது.

    அதுமட்டுமல்ல. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுபாஷ்கரன், கத்தி திரைப்படத்துக்கான முதலீடு தன்னுடைய 2 நாள் வருமானம் மட்டுமே என்று அகந்தையாக கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட பினாமி பணமுதலைகளைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பில் தொடர்ந்தும் இயங்க அனுமதித்தால் நடிகர், நடிகைகள் இந்த பினாமி கும்பலை நோக்கித்தான் செல்வார்கள்.

    இதனால் சிறு திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாக நேரிடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம். லைக்கா நிறுவனத்துக்கு எதிரான எங்களது இந்த எதிர்ப்புக் குரலும் போராட்டமும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் உறவுகளுக்குமானது என்பதை திரை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தோம்.

    இத்தனை இயக்கங்கள் கை கோர்த்து "லைக்கா" நிறுவனத் தயாரிப்பான கத்தி திரைப்படத்தை எதிர்ப்பதால் இப்படத்தை வாங்கி விநியோகிக்காமலும் தங்களது திரையரங்குகளில் திரையிடாமலும் இருக்க வேண்டும் என்று 150-க்கும் மேற்பட்ட தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    பொய்யான வதந்தி

    இந்த நிலையில் 'கத்தி' திரைப்படம் தொடர்பான எங்களது எதிர்ப்பில் தீர்வு காணப்பட்டுவிட்டது; சுமூகத் தீர்வு காணப்பட்டது என்று ஊடகங்களில் பொய்யான செய்திகளை கத்தி திரைப்படக் குழுவும் லைக்கா நிறுவனமும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த செய்திகளில் துளியும் உண்மை இல்லை. கத்தி திரைப்படத்தின் தயாரிப்பில் இருந்து லைக்கா நிறுவனம் விலகும் வரை எங்களது எதிர்ப்பு தொடரவே செய்யும்.

    இப்படி பொய்யான செய்திகளைப் பரப்பி விஜய் ரசிகர்கள், தமிழ்த் திரைப்பட உலகத்துக்கும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்புக்கும் இடையே மோதலை உருவாக்கும் பெரும் சதியில் லைக்கா நிறுவனம் இறங்கியுள்ளது.

    இத்தகைய மோதல் மூலம் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க செய்ய வேண்டும் என்ற ராஜபக்சேவின் சதித் திட்டத்தை லைக்கா நிறுவனம் அரங்கேற்ற முயற்சிக்கிறது என்று நாங்கள் குற்றம்சாட்டுகிறோம்.

    தற்போது கத்தி திரைப்படத்துக்கு தமிழக அரசே பாதுகாப்பு கொடுக்கப் போகிறது என்று ராஜபக்சேவின் அடிவருடி சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் பொய்யான ஒரு செய்தியை பகிரங்கமாக தெரிவித்திருப்பதன் மூலம் ராஜபக்சே- லைக்கா நிறுவனம்- சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரின் கூட்டுச் சதியும் அம்பலமாகி இருப்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

    அற வழிப்போராட்டம்

    கத்தி திரைப்படத்தை தயாரிப்பில் இருந்து இனப்படுகொலையாளன் ராஜபக்சே குடும்பத்தினர் பங்குதாரராக இருக்கும் லைக்கா நிறுவனம் வெளியேறும் வரை எங்களது எதிர்ப்பும் அறவழிப் போராட்டமும் தொடரவே செய்யும். லைக்கா
    நிறுவனம் ஊடகங்களில் பரப்பி விடும் எந்த ஒரு செய்தியையும் தமிழ் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    எங்களது வேண்டுகோளை மீறி கத்தி திரைப்படம் வெளியானால் எங்களது எதிர்ப்பை அறவழியில் அனைத்து திரையரங்குகள் முன்பாக வெளிப்படுத்துவோம் என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசிய அமைப்புகள், பெரியார் இயக்கங்கள், மாணவர் அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், படைப்பாளிகள் அனைவரும் நமது கூட்டமைப்பின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை லைக்கா நிறுவனமும் கத்தி திரைப்படக் குழுவும் பரப்பிவிடும் எந்த ஒரு வதந்தியையும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் நமது தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அத்தனை அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தோழர்களும் தொண்டர்களும் கத்தி திரைப்படத்துக்கு எதிராக அமைதியான அறவழியில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும்; எந்த ஒரு வன்முறைச் சம்பவங்களிலோ வேறு எந்த ஒரு நடவடிக்கையிலோ ஈடுபடவே கூடாது என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலான சட்டம் ஒழுங்கு சீர்குலைவு செயல்களை மேற்கொள்வதன் மூலம் நமது இன எதிரிகள் கொண்டாடி மகிழ்வதற்கு ஒருபோதும் நாம் இடம் அளித்துவிடக் கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
    Posted by விழியே பேசு... at 5:36 PM
    Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
    Labels: சினிமா, செய்தி

    No comments:

    Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

எழுத்துக்களை பெரிதாக மாற்ற

Get This

விழியே பேசு...

விழியே பேசு...

↑ Grab this Headline Animator

உங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner

Blog Archive

  • ►  2015 (650)
    • ►  August (1)
    • ►  March (2)
    • ►  February (169)
    • ►  January (478)
  • ▼  2014 (1155)
    • ►  December (465)
    • ►  November (469)
    • ▼  October (217)
      • 'நெருங்கிவா முத்தமிடாதே’ அந்த மாதிரி படம் இல்ல!
      • காப்பியடிங்க! காயப்படுத்தாதீங்க!
      • பார்த்திபன் கொடுத்த ஐடியா!
      • செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மீடியேட்டரை செருப்பால் அட...
      • முட்டாள்களுடன் பணியாற்றினேன் இசை அமைப்பாளருக்கு கட...
      • வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியா...
      • சித்தார்த் வீட்டில் சமந்தா!
      • சொத்துத் தகராறு: நடிகர் கார்த்திக் மீது தாயார் போல...
      • அனுஷ்காவின் தலைக்காதல்கள்...
      • ராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி’ படத்தில் இருந்து வ...
      • என்னை மணக்க பாவனா பைத்தியம் இல்லை: இயக்குனர் தடாலடி
      • விஜய் 58-ல் முதல் முதலில் ...
      • கதை எழுத சொல்லும் கத சொல்லப் போறோம் டீம்
      • காவியத்தலைவன் சார்பில் நடிப்பு போட்டி-வசந்தபாலன் த...
      • த்ரிஷா-ராணா பிரிவுக்கு நடிகை காரணமா?
      • அஜித் விஷால் மோதல்
      • சிறந்த வீரர் விருது மெஸ்ஸியை முந்தினார் ரொனால்டோ க...
      • கொடுத்த வாக்குறுதியை ராஜபக்சே மீறிவிட்டார் பொன்.ர...
      • பாலிவுட் நடிகருக்கு சரமாரி அடி சனா கான் காதலன் கோபம்
      • தமிழகத்தில் காங்கிரஸ் உடைகிறது: ஜி.கே.வாசன் புது க...
      • மலேசியாவில் விஜயகாந்த்… ''ரசிகர்களே கன்னம் பத்திரம்''
      • திடீர் திருப்பம் - அஜீத் ஜோடி ஹன்சிகா கிடையாது
      • ’மாஸ் - கிளாஸ்’ - புகழ்ந்து தள்ளும் திரையுலகினர்!
      • அஜீத்தின் அதாரு உதாரு முடிந்தது
      • தமிழனுக்கு தூக்கு சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலைய...
      • கத்தி, பூஜை வெளிநாட்டு வசூல் நிலவரம்
      • மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை: தண்டவாளம் ...
      • மதுரைக்கு இணைந்து சென்ற ஸ்டாலின்- வைகோ…
      • 'காற்று என்னை எடுத்து செல்லட்டும்' - தூக்கிலிடப்பட...
      • ரூ 100 கோடியை நோக்கிச் செல்லும் கத்தி வசூல்!
      • அனிருத் காப்பி அடித்தாரா? உண்மை வீடியோ!
      • தென் கொரிய டி.வி. சீரியல்களை பார்த்த 50 வடகொரியர்க...
      • வெளியானது அஜீத்தின் என்னை அறிந்தால் பர்ஸ்ட் லுக்... !
      • 'மோடி தலையைத் துண்டிப்போம்': கொலை மிரட்டல்
      • 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை- கொழும்பு ஹைகோர்ட்! ...
      • சோனியாவின் மூன்றாவது படம் - விஜய் சேதுபதியுடன் நடி...
      • கொச்சியில் நூதன போராட்டம் ‘காதல் முத்தம்’ போலீஸ் அ...
      • இந்தியாவுக்காக மீண்டும் விளையாடுவது சந்தேகமே: விரக...
      • கத்தி தயாரிப்பாளர் கைது !?
      • மாறன் சகோதரர்கள் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
      • கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி! வை...
      • துரத்தும் தயாரிப்பாளர்கள்! ஓடும் முருகதாஸ்!
      • யுவன் சங்கர் ராஜாவுக்கு நிச்சயம் முடிந்தது: துபாயி...
      • தமிழகத்தில் 6152 அரசுப் பள்ளிகளில் டாய்லெட்டே கிடை...
      • தமிழக அரசியலில் பரபரப்பு... ஒரே மேடையில் திமுக- தே...
      • எந்த மாதிரியானது விஜய்-யின் அடுத்த படம்?
      • வீட்டை விட்டு விரட்டப்பட்டார் நடிகர் கார்த்திக்?.....
      • விஜய்யுடன் நடிக்க மறுத்த நடிகர்
      • இசை கல்லூரியில் படிக்க ஏ.ஆர். ரகுமான் விருப்பம்
      • மோனிகா கடைசி படம்
      • கோலிவுட் - பாலிவுட் வில்லன்கள் மோதல்
      • கத்தி விநியோகஸ்தருக்கு ரூ 2 கோடி நஷ்டமாம்!
      • கத்தி நஷ்டத்தின் பின்னணி இதுதான்
      • இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியில் சேர லஞ்சமாக செக்...
      • நிர்வாண காட்சி படத்துக்கு கத்தரி வைக்காத சென்சார்
      • கடலுக்கு அடியில் எலக்ட்ரானிக் ஷோரூம்
      • விண்வெளிக்கு உபகரணங்கள் கொண்டு சென்ற அமெரிக்க சரக்...
      • கருப்பு பணம் பதுக்கியவர்கள் யார்-யார்?: சுப்பிரமணி...
      • பிறந்தநாளில் தாய்க்கு கோவில் கட்டும் நடிகர்
      • கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்...
      • இந்தோனேசியாவில் மாயமான மலேசிய விமானம்?
      • விஜய்யுடன் எனக்குப் போட்டியா?.. - விஷால் விளக்கம்
      • சொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது?: பொ...
      • உயிருக்கு அச்சுறுத்தலா? ஷாரூக், தீபாகாவுக்கு திடீர...
      • சகாயத்துக்கு ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்...
      • உலகில் முதன்முறையாக ஜன்னல் இல்லாத விமானம்
      • விபச்சார வழக்கில் கைதான நடிகை உயிருக்கு தொழிலதிபர்...
      • இந்தியா வல்லரசு நாடாகும் - விஜய்விளக்கம்
      • ஊழல் நஷ்டத்தை சரிகட்ட பால் விலையை உயர்த்துவதா?: கே...
      • கணக்கை எளிதாகச் செய்ய ஓர் இணையதளம்!
      • விஜய்க்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ்!
      • கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பெயர்களை நாளைக்குள் ...
      • அரசியல்வாதிகளெல்லாம் ரொம்ப "சில்லி"... சானியா கோபம்
      • அடுத்த சேவாக் என்று வர்ணிக்கப்படும் இளம் பேட்ஸ்மென...
      • ஆர்யா படத்தில் அஜீத்?
      • படப்பிடிப்புத் தளத்தில் நடிகையை பலாத்காரம் செய்ய ம...
      • இந்தியாவில்விடுதலைப் புலிகள் மீதான தடை ரத்தாகுமா?...
      • கருப்பு பணம்: 3 பெயர்களை வெளியிட்டது மத்திய அரசு
      • எனக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு இல்லை.. மு...
      • இந்தியாவுக்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்
      • பன்னீர் பதவியில் நீடிக்க கருணாநிதி ஆலோசனை
      • அனிருத்துக்கு விஜய் கொடுத்த பரிசு!
      • சொத்து விவரம் சமர்ப்பிக்காத அத்வானி, சோனியா,ராகுல்
      • ஆதார் அட்டை விவகாரத்தில் பல்டி
      • காஷ்மீரை மீட்பேன் என்ற பிலாவல் பூட்டோ மீது தாக்குதல்
      • ரஜினியிடம் பாடம் கற்ற சோனாக்ஷி
      • கால்பந்து கேப்டன் காதலி வீட்டில் சுட்டுக்கொலை
      • பின்லேடனை கண்டுபிடித்த பெல்ஜியன் மாலின்வா என்.எஸ்....
      • மதுபான விலையை உயர்த்தும் அரசு
      • கத்தி வசூல்: ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்
      • காந்திக்குப் பதிலாக நேருவை கொலை செய்திருக்க வேண்டு...
      • பாஜகவுடன் இருக்கலாமா, வேண்டாமா.. கட்சிக்காரர்களிடம...
      • பெங்களூர் சிட்டி ரெயில் நிலையத்தில் இலவச ‘வை–பை‘ இ...
      • நடிகைகளின் வாழ்க்கை ‘திருப்பங்கள்’
      • விஜய் "ஓவர்"... அடுத்து அஜீத் பக்கம் முருகதாஸ்!
      • ரஜினி வந்தா வரட்டும், யாரும் கட்டாயப்படுத்தவில்லை....
      • ரஜினியை சந்தித்து பேசிய "கா.சி" : கடுப்பில் பாஜக
      • பொறுமை இழந்த விஜய்சேதுபதி!
      • எந்திரனை முந்தியதா கத்தி? - விறுவிறு பாக்ஸ் ஆபிஸ்
      • ரகுமான் ஜோடியாக ஜோதிகா ரீ என்ட்ரி
    • ►  September (1)
    • ►  May (1)
    • ►  April (2)
  • ►  2013 (43)
    • ►  December (2)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  July (3)
    • ►  June (10)
    • ►  May (8)
    • ►  April (14)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2012 (3624)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (78)
    • ►  September (270)
    • ►  August (482)
    • ►  July (426)
    • ►  June (409)
    • ►  May (561)
    • ►  April (425)
    • ►  March (333)
    • ►  February (295)
    • ►  January (336)
  • ►  2011 (6568)
    • ►  December (434)
    • ►  November (512)
    • ►  October (453)
    • ►  September (419)
    • ►  August (478)
    • ►  July (498)
    • ►  June (616)
    • ►  May (668)
    • ►  April (772)
    • ►  March (766)
    • ►  February (513)
    • ►  January (439)
  • ►  2010 (406)
    • ►  December (288)
    • ►  November (113)
    • ►  October (5)

Followers

நான் ...

விழியே பேசு...
சொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .
View my complete profile

Popular Posts

  • முகவரி இல்லாத இமெயில் ...
  • உலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...
  • மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!(வீடியோ)
  • தலைவா பட பாடல்கள் ( Download Thalaiva (2013) Mp3 Songs Online )
  • மரியான் பாடல்கள் ( mariyaan songs free download )
  • விஸ்வரூபம் பாடல்கள் (Viswaroopam Songs Free Download)
  • விஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)
  • தொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்
  • அஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்?
  • காமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்

Infolinks In Text Ads

TamilTopsiteUlavan
Tamil Top Blogs
Tamil 10 top sites [www.tamil10 .com ]
Follow on Buzz

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Entertainment blogs
valaipookkal.com Tamil Blogs
எமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
Awesome Inc. theme. Powered by Blogger.