இந்த ஆண்டின் வெற்றிப் படங்களில்
அனைத்துத் தரப்பினருக்கும் மிகப் பெரும் லாபத்தைக்
கொடுத்த படமாக தனுஷ் நடித்த
'வேலையில்லா பட்டதாரி' படம் விளங்கியது. தொடர்ச்சியாக
தோல்விப் படங்களால் துவண்டிருந்த தனுஷுக்கு இந்தப் படம் அவரை
மீண்டும் பழைய வெற்றிப் பாதைக்குக்
கொண்டு சென்றது. 'ராஞ்சனா' படம் மூலம் ஹிந்தியில்
கூட வெற்றி பெற்ற தனுஷ்,
தமிழில் மீண்டும் தடம் பதிக்க உதவிய
படமாகவும் அமைந்தது. பிரபல ஒளிப்பதிவாளரான வேல்ராஜ்
இப்படத்தை இயக்கினார். அமலா பால், சமுத்திரக்கனி,
சரண்யா உள்ளிட்ட அனைவரின் இயல்பான நடிப்பும், அழகான
குடும்பக் கதையும் அனைத்து ரசிகர்களையும்
கவர்ந்தது.
தமிழில்
வெற்றி பெறும் படங்கள் தெலுங்கில்
வழக்கமாக டப்பிங் செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி தற்போது 'வேலையில்லா பட்டதாரி' படத்தையும் தெலுங்கில் டப் செய்து வெளியிட
உள்ளார்களாம். படத்திற்கு 'ரகுராம் பி.இ'
என பெயர் வைத்திருக்கிறார்கள். தனுஷ் நடித்த
'திருடா திருடி' படம் முதல்
கொண்டு அவருடைய பல படங்கள்
தெலுங்கில் டப் செய்யப்பட்டும், ரீமேக்
செய்யப்பட்டும் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தில் கையாளப்பட்டுள்ள
பிரச்சனை ஒரு சராசரிக் குடும்பத்து
இளைஞனின் பிரச்சனை என்பதால் தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெறும்
என நம்புகிறார்கள்.
இந்தப்
படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்ய உள்ளார்களாம்.
தனுஷே ஹிந்தி ரீமேக்கில் நடிக்க
ஆர்வமாக உள்ளார் என்கிறார்கள்
No comments:
Post a Comment