ஏழைகள்
வாழ்க்கையில் விளையாடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை
கையை துண்டிப்பேன் என பீகார் முதல்வர்
ஆவேசமாக பேசினார்.
பீகாரில்
முதல்வர் ஜிதின்ராம் மஞ்சி தலைமையில் ஐக்கிய
ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்
பாட்னாவில் நடந்த தசரா பண்டிகையின்
போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில்
30-க்கும் மேற்பட்டோர் இறந்தார். காயமடைந்தவர்கள் பாட்னா அரசு மருத்துவக்கல்லூரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள், மருத்துவமனை
ஊழியர்கள் போதிய சிகிச்சை அளிக்கவில்லை
என புகார் கூறினர்.
இந்நிலையில
மோத்திஹாரி மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில்
பங்கேற்ற முதல்வர் ஜிதின்ராம் மஞ்சி பேசுகையில், ஏழை
எளிய மக்கள் வாழ்க்கையில் விளையாடுபவர்கள்
யாராக இருந்தாலும் அவர்கள் கையை துண்டித்துவிடுவேன்
என ஆவேசமாக பேசினார். இவரின்
ஆவேச பேச்சு முதலில் குழப்பத்தை
ஏற்படுத்தியது.பின்னர் தான் அவர்
அரசு டாக்டர்களை எச்சரிக்கும் விதமாக பேசியது புரிந்தது.
No comments:
Post a Comment