அகத்தியன்
இயக்கவிருந்த படத்திலிருந்து அவரை வெளியேற்றிவிட்டு பாரதிராஜா
இயக்குனர் ஆகிறார்.‘காதல் கோட்டை‘, ‘கோகுலத்தில்
சீதை‘ என வித்தியாசமான காதல்
கதைகளை இயக்கியவர் அகத்தியன். கடந்த சில ஆண்டுகளாக
படம் இயக்காமல் ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில்
அவரை அழைத்த பாரதிராஜா தனது
நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதை அகத்தியன் ஏற்றார். நகரம், கிராமம் என
இரண்டு கதை அம்சங்கள் உள்ளடக்கிய
இப்படத்தில் சந்தோஷ் பிரதான், விஜயலட்சுமி,
ஓவியா, பாரதிராஜா, மனோஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு ஆர்ப்பாட்டம்
எதுவும் இல்லாமல் கோயமுத்தூரில் தொடங்கியதாக தெரிகிறது.
அகத்தியன்
தனது பாணியில் படத்தை இயக்கினார். ஆனால்
அவர் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்துக்கு வராமல்
லேட்டாக வந்ததாக கூறப்படுகிறது. இது
பாரதிராஜாவுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அகத்தியனை நீக்கிவிட்டு தானே படம் இயக்கும்
பொறுப்பை ஏற்க முடிவு செய்துள்ளாக
கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே ஈகோ பிரச்னை
தலைதூக்கியதாகவும் அவர்களை சமாதானப்படுத்த சிலர்
மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்கவில்லை
என்றும் கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது.
No comments:
Post a Comment