பாஜகவினரின்
உத்தி சற்றும் புரியவில்லை. ஒருபக்கம்
ரஜினிகாந்த்தை இழுக்கப் பார்க்கிறார்கள். மறுபக்கம், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை
பாஜகவில் ஐக்கியமாக்க முயற்சி நடக்கிறதாம். கூடவே,
எந்தப் பக்கம் போவது என்று
தெரியாமல் போகிற போக்கில் போய்க்
கொண்டிருக்கும் விஜய்யயைும் பாஜகவுக்குள் இழுத்துப் போட முயற்சிகள் நடந்து
வருகிறதாம்.
அதாவது
ரஜினியையும் கட்சிக்குள் இழுத்து, விஜயகாந்த் கட்சியைக் கலைத்து அதையும் பாஜகவுடன்
சேர்த்து, அப்படியே விஜய்யையும் உள்ளே கொண்டு வந்து
ஒரு கலவை சாதம் போன்ற
கூட்டணிக்கு பாஜக முயற்சிப்பதாக தெரிகிறது.
ஆனால் இது காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்டி மேய்த்த
குழப்பக் கூட்டணியை விட படு கோமாளித்தனமானது
என்பது பாஜகவுக்குத் தெரியவில்லையா என்று புரியவில்லை.
எத்தைத்
தின்றால் பித்தம் தெளியும்
எத்தைத்
தின்றால் பித்தம் தெளியும் என்ற
நிலையில் பாஜக உள்ளது. தமிழகத்தில்
சற்றும் வேர் பிடிக்காமல் இருக்கும்
தேசிய கட்சி பாஜக. இன்னொரு
கட்சி காங்கிரஸ். காங்கிரஸாவது பரவாயில்லை. சில காலத்திற்கு முன்பு
வரை யாராவது ஒருவர் சவாரிக்குக்
கூட்டிக் கொண்டு போய் வந்தார்கள்.
ஆனால் பாஜகவை கணடுகொள்ள கூட
ஆள் இல்லாத நிலைதான் மோடி
வரும் வரை.
மோடி வந்தும் கூட முடியலையே
ஆனால் மோடி வந்தும் கூட
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, கடந்த லோக்சபா
தேர்தலில் மிருக பலத்துடன் அத்தனை
கட்சிகளையும் தூக்கிப் போட்டு மிதித்தது. ஊரெல்லாம்
மோடி பாட்டாக இருந்த நிலையில்
தமிழகத்தில் மட்டும் 'அம்மா என்று அழைக்காத
உயிரில்லையே...' என்று மக்கள் பாட்டுப்
பாடி விட்டனர்.
ஜெயிலில்
ஜெயலலிதா.. குஷியில் பாஜக
ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது.
ஜெயலலிதா ஜெயிலுக்குப் போய் விட்டார். இதை
வைத்து ஆதாயம் அடையத் துடிக்கிறது
பாஜக. இதற்காக அது ரஜினிகாந்த்தை
கட்சிக்குள் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.
கூடவே இவர்களையும் சேர்த்துக்கிட்டா....!
இநந்த முயற்சிகள் ஒரு பக்கம் நடந்தாலும்
மறுபக்கம் மேலும இருவரையும் கட்சிக்குள்
கொண்டு வர முயற்சிகள் தொடங்கியுள்ளதாம்.
விஜயகாந்த்…விஜய்!
ஒருவர்
விஜயகாந்த். இன்னொருவர் விஜய். இதில் விஜயகாந்த்
நடிகராக இருந்து பின்னர் அரசியல்வாதியாக
மாறி இப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும்
இருக்கிறார். ஆனால் அவரது கட்சி
இன்னும் ஒரு குட்டிக் கட்சியாகத்தான்
இருக்கிறது. அதிமுக புண்ணியத்தால் கடந்த
சட்டசபைத் தேர்தலில் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெற்றது. ஆனால் எதிர்காலத்தில் அது
சாத்தியமில்லை என்பது அக்கட்சியினருக்கே நன்றாக
தெரிந்திருக்கிறது.
நம்பர்
கணக்கு
இந்த நிலையில்தான் விஜயகாந்த் கட்சிக்கு உள்ள வாக்கு வங்கியை
அப்படியே சிந்தாமல் சிதறாமல் தன் பக்கம் கொண்டு
இன்னொரு வேலையிலும் பாஜக இறங்கியுள்ளது என்கிறார்கள்.
அதாவது சிரஞ்சீவி கட்சியை காங்கிரசில் இணைய
வைத்தது போல அப்படியே தேமுதிகவை
முழுசாக பாஜகவில் இணைக்க வைப்பதுதான் அது.
இது முன்பே தொடங்கி விட்ட
பழைய முயற்சிதான். ஆனால் இந்த முயற்சிகள்
பலிப்பது கஷ்டமே.
ஒரு வேளை ரஜினி வராவிட்டால்...
அதே போல ரஜினியை இழுக்கும்
முயற்சியில் எந்த அளவுக்கு பலன்
அளிக்கும் என்பதும் தெரியவில்லை. முயற்சிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
கூடவே விஜய்யும்
இவ்வாறாக
ரஜினி, விஜய்காந்த் என இரு வலைகளை
வீசிவிட்டதோடு நிற்கவில்லை பாஜக. விஜய்யையும் கட்சிக்குள்
கூட்டிக் கொண்டு வந்து விடும்
முயற்சிகளிலும் இறங்கியுள்ளனர்.
முதல்வர்
வேட்பாளர் விஜயகாந்த்தாம்
ரஜினி வராத நிலையில் விஜயகாந்த்
தனது கட்சியைக் கலைத்து விட்டு பாஜகவில்
இணைய முன்வந்தால் அவரையே முதல்வர் வேட்பாளராக
அறிவிக்கவும் பாஜக ரெடியாக உள்ளதாகவும்
சொல்கிறார்கள்.
பொருளாதார
ரீதியாக நஷ்டத்தில் விஜயகாந்த்
தற்போது
பொருளாதார ரீதியாக பெரும் சிரமத்தில்
இருக்கிறாராம் விஜயகாந்த். கட்சியை நடத்துவது பெரும்
பாடாக உள்ளதாம். கேப்டன் டிவியும் கூட
தள்ளாடி வருகிறதாம். எனவே லம்ப்பாக விஜயகாந்த்துக்குக்
கை கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாம்.
விஜய் ரெடிதானாம்
மறுபக்கம்
காவிக் கரை பேன்ட் சட்டை
போட விஜய் ரெடியாகத்தான் இருக்கிறாராம்.
அவர் ஏற்கனவே கோவைக்கு வந்த
நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார். மேலும் கத்தி படத்திற்கும்
பாஜக தரப்பிலிருந்து சென்சார் மூலமாக சிக்கல் வராமல்
பார்த்துக் கொண்டதாக கூறுகிறார்கள்.
அப்ப ரஜினி...!
ஒருவேளை
ரஜினியே பாஜகவுக்குள் வர முடிவெடுத்துவிட்டால் விஜயகாந்த்தை பின்னுக்குத்
தள்ளி விடுமாம் பாஜக. வராவிட்டால் விஜயகாந்த்தான்
முதல்வர் வேட்பாளராம்.
அப்ப து.மு யாரு..
விஜய்யா....??
No comments:
Post a Comment