2003ம்
ஆண்டு நடந்த உலகக் கோப்பைக்
கிரிக்கெட் போட்டியின்போது வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் என்ன
செய்வது என்று தெரியாமல், தனது
ஜட்டியில் டிஷ்யூ பேப்பரை திணித்து
வைத்துக் கொண்டு இலங்கைக்கு எதிரான
போட்டியில் ஆடினாராம் சச்சின் டெண்டுல்கர். வயிற்றுப்
போக்கையும் சமாளித்துக் கொண்டு, மகா பொறுமையாக,
ஆடி அந்தப் போட்டியில் 97 ரன்களை
எடுத்தார் சச்சின் என்பது சுவையானது...
அதாவது அவரது பேட்டிங்...!
தனது மலரும் நினைவுகளையும், கடந்த
கால சம்பவங்களையும் தனது வாழ்க்கை வரலாற்று
நூலான பிளேயிங் இட் மை வே
என்ற பெயரில் வெளியிட்டுள்ளார் சச்சின்.
அதில் அவர் ஒரு நறுமணம்
கமழும் சம்பவம் ஒன்றைப் பற்றியும்
குறிப்பிட்டுள்ளார்.
2003 உலகக்
கோப்பை
தென் ஆப்பிரிக்காவில் 2003ம் ஆண்டு நடந்த
உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் சிக்ஸ் பிரிவில்,
ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடந்த இலங்கைக்கு
எதிரான போட்டியின்போது நடந்த சுவாரஸ்யத்தை விளக்கியுள்ளார்
சச்சின்.
10வது போட்டி
10வது போட்டியான அதில், இந்தியாவும், இலங்கையும்
முக்கிய மோதலில் ஈடுபட்டிருந்தன. அப்போது
தனக்கு நேர்ந்த ஒரு இக்கட்டான
நிலை குறித்து விளக்கியுள்ளார் சச்சின்.
சொல்ல சங்கட்டமா இருக்கு பாஸ்!
இலங்கை
போட்டியின்போது எனக்கு ஏற்பட்ட ஒரு
பெர்சனல் ரகசியத்தை சொல்ல விரும்புகிறேன், சொல்வதற்கு
சங்கடமாக இருந்தாலும்.
அந்தப்
போட்டிக்கு முன்பாக எனக்கு வயிற்றுப்
போக்கு நிலைமை ஏற்பட்டது. வயிறு
சரியில்லை. வயிற்றில் ஏற்பட்ட வலியிலிருந்து முழுமையாக
குணமடையாததால் இந்த வயிற்றுப் போக்கு
ஏற்பட்டது.
இதை சரி செய்ய நிறைய
ஐசோடானிக் டிரிங்ஸ் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்படியும் வயிறு நார்மலுக்குத் திரும்பவில்லை.
வயிறை கட்டுப்பாட்டில் வைக்க சத்து பானங்களுடன்
உப்பையும் சேர்த்து குடித்து வந்தேன். சரியாகி விடும் என்று
நினைத்தேன். ஆனால் வயிறு உப்புசமாகி
விட்டது.வயிறை கட்டுப்பாட்டில் வைக்க
சத்து பானங்களுடன் உப்பையும் சேர்த்து குடித்து வந்தேன். சரியாகி விடும் என்று
நினைத்தேன். ஆனால் வயிறு உப்புசமாகி
விட்டது.
நிலைமையும்
ரொம்ப மோசமாக இருந்தது. வேறு
வழியே இல்லை என்ற நிலையில்
எனது உள்ளாடைக்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துக்
கொண்டு பேன்ட்டை போட்டுக் கொண்டு களம் இறங்கினேன்.
டிரிங்ஸ்
பிரேக்கின்போது நான் டிரஸ்ஸிங் ரூமுக்குப்
போய் ரிலாக்ஸ் செய்யும் நிலையும் நேரிட்டது. ஆட்டத்தின் நடுவே மிகவும் அவஸ்தைப்பட்டேன்
என்று கூறியுள்ளார் சச்சின்.
இந்தப்
போட்டியில் உள்ளாடைக்குள் டிஷ்யூ பேப்பரை வைத்துக்
கொண்டு ஆடியும் கூட உடல்
நலிவையும் பொருட்படுத்தாலம், 120 பந்துகளில் 97 ரன்களை எடுத்தார் சச்சின்.
மேலும் சச்சின் எடுத்த அந்த
ரன்களின் உதவியுடன் இலங்கையை 183 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா
வீழ்த்தியது.
நான்
97 ரன்களை எப்படியோ எடுத்து விட்டேன் என்ற
போதிலும் அதை எடுக்க நான்
மிகவும் சிரமப்பட நேரிட்டு விட்டது. ஆனால் கடைசியில் நாம்
வென்ற செய்தி எனக்கு பெரும்
நிம்மதியைக் கொடுத்தது என்றார் சச்சின்.
இந்தப்
போட்டிக்கு முன்பு நடந்த பாகிஸ்தானுக்கு
எதிரான போட்டியின்போது 98 ரன்களை விளாசியிருந்தார் சச்சின்.
அதில் அவர்தான் ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.
அந்தப் போட்டியின்போதுதான் அவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது என்பது
குறிப்பிடத்தக்கது.
மேலும் .....
No comments:
Post a Comment