கவுதம்
மேனன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் புதிய படமான என்னை
அறிந்தால் வரும் ஜனவரி மாதம்
பொங்கலன்று வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜீத்துக்கு
ஜோடியாக இந்தப் படத்தில் அனுஷ்கா
மற்றும் த்ரிஷா நடித்துள்ளனர். ஹாரிஸ்
ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏ எம் ரத்னம்
தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு
வெளியாவது இன்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர்
தரப்பில் அறிவித்துள்ளனர்.
அஜீத் இதில் இருவித தோற்றங்களில்
நடித்துள்ளார். அதில் ஒன்று போலீஸ்
வேடம். சமீபத்தில்தான் இதன் போஸ்டர்கள் வெளியாகி
ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.
விரைவில்
படத்தின் இசை வெளியாக உள்ளது.
இந்தப் படம் பெங்கலுக்கு இரண்டு
நாட்கள் முன்னதாக ஜனவரி 13-ம் தேதியே வெளியாகிறது.
இதைத் தொடர்ந்து வரும் 10 நாட்கள் தொடர்ந்து விடுமுறை
தினங்கள் அல்லது சேர்ந்த மாதிரி
விடுப்பெடுக்க வசதியான நாட்கள்.
எனவே இந்த பத்து
நாட்களிலும் படம் பெரும் வசூலைக்
குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.
மேலும் .....
No comments:
Post a Comment