நடிகர் விஜயகுமாருக்கும் அவரது மகள் வநிதாவுக்குமான சண்டை உச்சக்கட்டத்தை எட்ட ஆரம்பித்துள்ளது. இருவரும் ஆவேசமாக ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேட்டி கொடுத்தனர்(அவர்களின் பேட்டியின் வீடியோவை பார்க்க இங்கு செல்லவும்) விஜயகுமார் வனிதாவுக்கு தனது செல்வாக்கின் மூலம் பல வழிகளிலும் வனிதாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார். நேற்று முன்தினம் வனிதாவின் முதல் கணவரான நடிகர் ஆகாஷை வைத்து நெருக்கடி கொடுத்தார். (அந்த செய்தியை படிக்க இங்கு செல்லவும் .) இன்று நடிகர் சங்கத்தின் மூலம் நெருக்கடியை கொடுத்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி இன்று வெளிய¤ட்ட அறிக்கை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உபதலைவர் பதவியில் இருந்து விஜயகுமாரை நீக்க வேண்டும் என்று அவரது மகள் வனிதா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2009&2012ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தலில் உபதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயகுமார்.
அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்வதற்கான உரிமை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினரல்லாத வனிதாவுக்கு இல்லை. மேலும் அவர் பாரம்பரியம் மிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு அறிவுரை சொல்லும் அவசியம் இல்லை. கலைக் குடும்பத்தை சேர்ந்த நீங்கள் பிரச்னைகளை பேசி தீர்க்காமல், இப்படி வார்த்தைகளால் தாக்கிக் கொள்வது கண்ணாடி அறையில் இருந்து கொண்டு கல்வீசுவது போன்றதாகும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்

கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிய வேண்டாம் என்றால், யார் கண்ணாடி கூண்டுக்குள் இருப்பது. வனிதாவா? அல்லது இவர்களா? என்று வனிதா வாயை திறந்தால் தான் தெரிய வரும். வனிதா இப்போது இருக்கும் மனநிலையில் அவர் பேச ஆரம்பித்தால் இவர்கள் அனைவரின் அண்டவாளங்களும் வெளிவரும் என்பதை மறந்து இவர்கள் விஜயகுமாரின் பேச்சை கேட்டு இப்படி ஒரு அறிக்கை விட்டு இருப்பதை பார்த்தால் இவர்கள் தான் கண்ணாடி கூண்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிகிறார்கள் என்று தான் எண்ண தோன்றுகிறது.
No comments:
Post a Comment