தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தலைமை கழகத்தில் இன்று முதல் மனு செய்யலாம் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். தமிழ்நாட்டில் போட்டியிடுபவர்கள் ரூ. 10 ஆயிரமும், புதுச்சேரியில் போட்டியிட ரூ. 5 ஆயிரமும் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மனு செய்வதற்காக அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்திருந்தனர். மனு வாங்க தனி கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தது.
முதல் நாளான இன்று பெரும்பாலானவர்கள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிட கோரி பணம் கட்டி மனு செய்தனர். ஆண்டிப்பட்டி திருப்பூர் வடக்கு, கோபி, கரூர், ராயபுரம், சைதாப்பேட்டை உள்பட 27 தொகுதிகளிலும் ஜெயலலிதா போட்டியிட கோரி கட்சியின் முன்னணி நிர்வாகிகளான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், எம்.பி.க்கள் சிட்ல பாக்கம் ராஜேந்திரன், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஜெயக்குமார், செந்தமிழன் மற்றும் ஆர்.பி.உதயகுமார், கோகுலஇந்திரா, செந்தில் பாலாஜி, சேலம் ரவிச்சந்திரன், திருத்தணி அரி,ஸ்ரீரங்கம் பரஞ்ஜோதி உள்பட 27 பேர் மனு செய்தனர்.
ஸ்ரீரங்கம், திருப்போரூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்பட 5 தொகுதிகளிலும் ஜெயலலிதா பெயரில் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கே.பி.கந்தன் பணம் கட்டி மனு கொடுத்தனர். தி.நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட கோரி கலைராஜன் எம்.எல்.ஏ.வும், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட கோரி கவிஞர் வீரைகரீம், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட கோரி ராஜன் செல்லப்பா, வில்லிவாக்கம், பெரம்பூர், மயிலாப்பூர், சோளிங்க நல்லூர் தொகுதிகளில் போட்டியிட கோரி கபாலீசு வரனும், அண்ணாநகர், விருகம்பாக்கத்தில் போட்டியிட கோரி கோதண்ட ராமரும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட முன்னாள் கவுன்சிலர் எஸ்.பவானி சங்கர் உள்பட ஏராளமானோர் பணம் கட்டி மனு செய்தனர்.
சோளிங்கநல்லூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு ஆகிய 5 தொகுதிகளிலும் ஜெயலலிதா போட்டியிட கோரி கோவிலம்பாக்கம் மணிமாறனும் மனு செய்தார். கன்னியாகுமரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து டைரக்டர் பி.சி.அன்பழகன், கோலப்பன் பத்மநாபபுரம் தொகுதிக்கு தமிழ்மகன் உசேன், கே.பி.ராஜேந்திரபிரசாத் ஆகியோரும் குளச்சல் தொகுதிக்கு ராஜ்குமார் மனு செய்தனர்.
பரங்கிமலை ஒன்றிய கவுன்சிலர் பெரும்பாக்கம் ராஜசேகர், ஆண்டிப்பட்டி, சோளிங்கநல்லுர் உள்பட 5 தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட மனு செய்தனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்து பணம் கட்டி மனு செய்ய நீண்ட கியூவில் காத்திருந்தனர்.

No comments:
Post a Comment