மும்பை தாக்குதல் தீவிரவாதி கசாப்பை தூக்கிலிடும் தேதியை மும்பை ஐகோர்ட்டு நாளை அறிவிக்கிறது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் அப்பாவி மக்கள் பலர் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டனர்.
அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி உயிருடன் பிடிபட்டான். அவன் மீது மும்பை தனிக்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட பகீம் அன்சாரி, சபாயுதீன் அகமத் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் இரு வரும் விடுதலை செய்யப்பட்டனர்.
கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்ய வேண்டும். இதையடுத்து மும்பை தாக்குதல் வழக்கு ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் தீர்ப்பை எதிர்த்து கசாப் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தான். மராட்டிய அரசும் 2 பேர் விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்துள்ளது.
இதில் வக்கீல்கள் வாதம் கடந்த ஜனவரி மாதம் 7-ந்தேதி நடந்தது. இதையடுத்து நீதிபதிகள் ரஞ்சனாதேசாய், ஆர்.வி. மோரே ஆகியோர் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். நாளை இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படுகிறது. அப்போது கசாப்பை தூக்கிலிடும் தேதியை நீதிபதிகள் அறிவிக்கிறார்கள்.

தீர்ப்புக்கே நாள் குறிக்க வேண்டியிருக்கு ?
ReplyDelete