வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றயிறக்கத்துடன் காணப்பட்டன. எந்த நிறுவனமும் பெரும் இழப்பையோ, லாபத்தையே பெறவில்லை. சன் தொலைக்காட்சி குழுமம் மட்டுமே இன்று பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று 0.16 சதவீதம் உயர்ந்தது. 18,011.01 புள்ளிகளுடன் தொடங்கிய சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கியதுமே அதிகபட்ச நிலையை அடைந்தது. 18,203.81 புள்ளிகள் அதிகபட்சமாகவும் 17,982.64 புள்ளிகள் குறைந்தபட்சமாகவும் இருந்தது. வர்த்தகம் முடிய ஒரு மணி நேர முன் 18,000 புள்ளிகளுக்கு கீழ் சென்று மீண்டும் உயரத்தொடங்கியது. நிறைவாக 29.04 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 18,037.19 புள்ளிகளுடன் உள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வர்த்தகம் தொடங்கிய முதல் இறுதி வரை ஏற்றயிறக்கங்கள் காணப்பட்டாலும், வர்த்தகம் நிறைவடைந்தபோது எந்த முன்னேற்றமும் பின்னடைவும் இல்லாமல் இருந்தது. 5430.15 புள்ளிகளுடன் தொடங்கிய நிப்டி அதிகபட்சமாக 5440.35 புள்ளிகளுக்கும் குறைந்த பட்சமாக 5376.95 புள்ளிகளுக்கும் இடையே காணப்பட்டன. வர்த்தக நேர முடிவில் 0.25 புள்ளிகள் மட்டுமே உயர்ந்த நிப்டி, 5396 புள்ளிகளுடன் உள்ளது. சென்ற வாரம் வெள்ளிக்கிழமை 5395.75 புள்ளிகளுடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
4.96 சதவீதம் உயர்ந்த வெல்ஸ்பன் கார்ப்ரேஷன் இன்று அதிக லாபத்தை பெற்ற நிறுவனங்களில் முதல் இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து சின்டெக்ஸ் இன்டஸ்டிரிஸ் 4.39 சதவீதமும், ஹவல்ஸ் இந்தியா 4.36 சதவீதமும், ஸ்ரீரேணுகா சுகர்ஸ் 4.18 சதவீதமும், எச்.டி.ஐ.எல். 3.90 சதவீதமும் உள்ளது.
சன் தொலைக்காட்சி குழுமம் இன்று பெரும் இழப்பை சந்தித்தது. இந்நிறுவனம் 11.45 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. 463.75 ரூபாய்க்கு விற்ற சன்தொலைக்காட்சியின் ஒரு பங்கு, இன்று 53.10 ரூபாய்கள் குறைந்து 410.65 ரூபாயாக உள்ளது. இதனை அடுத்து சென்ட்ரல் வங்கி 5.51 சதவீதமும், தெர்மாக்ஸ் 3.98 சதவீதமும், லான்கோ இன்ப்ராடெக் 3.95 சதவீதமும்,ஒரியன்டல் வங்கி 3.71 சதவீதமும் வீழ்ச்சியடைந்தது.

No comments:
Post a Comment