எகிப்தில் அதிபர் முபாராக் பதவி விலகக்கோரி அந்நாட்டில் 12 நாட்களாக கடுமையான போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் அதிபர் முபாராக் பதவி விலக மறுத்து வருகிறார். மேலும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும் அவரை பதவி விலக வற்புறுத்தினர். ஆனாலும் அவர் மறுத்துவிட்டார்.
அவர் செப்டம்பர் வரை பதவியில் நீடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதனை அந்நாட்டு மக்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் இன்று நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் பிக்பன் நகரில் 240 கிலோ மீட்டர் நீளமுள்ள கியாஸ் குழாயை உடைத்தனர்.
இதனை அடுத்து ராணுவத்தினர் உடனடியாக கியாஸ் சப்ளையை நிறுத்திவிட்டனர். இந்த கியாஸ் குழாய் வழியாக இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் நாட்டிற்கு கியாஸ் சப்ளை செய்யப்படுகிறது.
இது குறித்து எகிப்தின் உயர் அதிகாரிகள் கூறுகையில், இது மிகப்பெரிய பயங்கரவாத சதிச்செயலாகும். உலகில் 40 சதவீதம் கியாஸ் எகிப்தில் இருந்து சப்ளை செய்யப்படுகிறது. இதனை கெடுக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
எகிப்தின் புதிய பிரதமர் அஹமத் சாகிப் தலைமையில் சென்ட்ரல் வங்கி கவர்னர், பெட்ரோலிய அமைச்சர், நிதித்துறை அமைச்சர் என முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை கூட்டதிற்குப்பின் அந்நாட்டு நிதி அமைச்சர் தெரிவிக்கையில், போராட்டத்தால் 310 மில்லியன் டாலர் இழப்பு ஒவ்வொரு நாளும் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே வங்கிகள், பங்குச்சந்தை வரும் திங்கள் முதல் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment