எகிப்து அதிபர் முபாரக்கிற்கு எதிராக கடந்த 13 நாட்களாக அங்கு பயங்கர கலவரம் நடந்து வருகிறது. 30 ஆண்டுகளாக எகிப்தை ஆட்சி செய்து வரும் முபாரக் பதவி விலகக்கோரி அங்கு மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவியது. அங்கு இருந்த இந்தியர்கள் பத்திரமாக நாடு அழைத்துவரப்பட்டனர். மக்கள் நலப்பணிகளை செய்வதில்லை, விலைவாசி உயர்வு, போதிய சுகாதாரங்கள் இல்லாமை, வேலை வாய்ப்பின்மை, அடிப்படை வசதியின்மை போன்றவைகளுக்காக அரசுக்கு எதிராக மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
மேலும் முபாரக் அமெரிக்க அதிபர் ஓபாமாவிடம் வைத்திருந்த உறவிலும், ஒப்பந்தத்திலும் மக்களுக்கு ஈடுபாடு இல்லை. ஆகவே அதிபர் முபாரக்கை பதவி விலக கோரினார்கள். இதற்காக கலவரக்காரர்கள் துணை அதிபரை சந்தித்தனர். மக்களின் எதிர்ப்பால் பதவி விலகுவதாக முபாரக் அறிவித்தார். இதன்போக்கில் அவர் பதவி விலகினார்.
இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் கலவரத்தை கைவிடுவதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர். கலவரம் ஓய்ந்ததால் நாடுமுழுவதும் அமைதி நிலவி வருகிறது.
எகிப்தில் விரைவில் தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment