லண்டனில் உள்ள லாஸ் தம்ஸ்டோ என்ற இடத்தில் பாகிஸ்தான் வம்சாவளி மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இங்குள்ள மண்டபத்தில் முஷரப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.
1500 பேர் கலந்து கொண்டனர். முஷரப்பும் கூட்டத்தில் பங்கேற்றார். முஷரப் பேசி கொண்டிருந்தபோது கூட்ட அரங்கின் பின் புறத்தில் இருந்த ஒருவர் ஷூவை கழற்றி முஷரப் மீது வீசினார். ஆனால் ஷூ அவர் மீது படவில்லை.
மேடைக்கு முன்பகுதியில் வந்து விழுந்தது. உடனே போலீசார் ஷூ வீசியவரை பிடித்து அங்கிருந்து வெளியே கொண்டு சென்றனர். அவர் யார்? என்ற விபரம் எதையும் தெரிவிக்கவில்லை.
முஷரப் பேசிக்கொண்டிருந்தபோது மேலும் 2 பேர் அவர் பேச்சுக்கு எதிராக கூச்சல் போட்டார். அவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

No comments:
Post a Comment