ஆந்திராவில் காங்கிரஸ் பலம் குறைந்து வருகிறது. இதை ஈடு செய்யும் வகையில் பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரசுடன் இணைந்தது. ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திராவில் ஆதரவாளர்கள் அதிகரித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் ஆட்சியை இழக்கும் நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டிருந்தது. சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் காங்கிரசுடன் இணைந்திருப்பதால் இக்கட்சியின் 17 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரசுக்கு கிடைத்து உள்ளது.
டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் இன்று பிரஜா ராஜ்ஜியம் சிரஞ்சீவியும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும் சந்தித்து பேசினார்கள். 15 நிமிட சந்திப்பு முடிந்த பின் பிரஜா ராஜ்ஜியம் எந்த நிபந்தனையும் இன்றி இணைகிறது என சிரஞ்சீவி அறிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் காங்சிரசுடன் இணைந்துள்ளோம். இதற்காக எந்த நிபந்தனைகளையும் நாங்கள் விதிக்கவில்லை. பிரஜா ராஜ்ஜியம் நிபந்தனைகள் இன்றி காங்கிரசை ஆதரிக்கும். இவ்வாறு சிரஞ்சீவி கூறினார்.
அகில இந்திய காங்கிரசின் ஆந்திர பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வீரப்ப மொய்லி கூறியதாவது:-
சிரஞ்சீவி காங்கிரசுடன் இணைந்துள்ளார். இப்போதிலிருந்து அவரும் காங்கிரஸ் குடும்பத்தில் ஒருவர். அவர் கட்சி காங்கிரசுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு மொய்லி கூறினார்.
ஜெகன்மோகனை எதிர்க்கவே சிரஞ்சீவை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதா என்று வீரப்பமொய்லியிடம் நிருபர்கள் கேட்டதற்கு நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை. காங்கிரஸை பலப்படுத்தவே சிரஞ்சீவி எங்களுடன் இணைந்துள்ளார் என்றார்.

No comments:
Post a Comment