திருவாரூர் தெற்கு ரதவீதியில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பேசிய சுப.வீரபாண்டியன்,
திமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கிறது என்று ஒரு நண்பர் கேட்டார். எதிர் அணியினருக்கு கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்து தூள் தூளாக ஆக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. இது ஒரு புதிய போக்கு. பொதுவாக தேர்தல் நேரம் என்றால், கூட்டணியிலே எந்தெந்த கட்சியினர் இருக்கிறார்கள். எந்த கட்சிக்கு எந்த தொகுதி. எந்த தொகுதியில் எந்த வேட்பாளர் என்பதை அறிந்துகொள்பதிலேதான் மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
ஆனால் இப்போதுதெல்லாம் திமுக தேர்தல் அறிக்கை எப்போது வருகிறது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு மக்களிடையே பெரும் ஆர்வம் இருக்கிறது. பொதுவாக சொல்லவேண்டுமானால் இந்த தேர்தல் அறிக்கையை நிதிநிலை அறிக்கையாக மக்கள் பார்க்கிறார்கள். வெறும் தேர்தல் அறிக்கை அல்ல. அரசு வெளியிட்டுள்ள ஆணை என்று மக்கள் பார்க்கிறார்கள். நம்பிக்கை கொடுக்கிற அளவுக்கு தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது.
திமுக கூட்டணி எப்படி ஜனநாயகமாக இருக்கிறது. அந்த கூட்டணி எப்படி ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு செய்தியை மட்டும் கூறுகிறேன்.
திமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது அனைவரும் மகிழ்ந்தார்கள். ஆனால் அந்த கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, கூட்டணியில் இருந்த அத்தனைபேரும் அதிர்ந்தார்கள். அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதும், தேமுதிக அதிர்ச்சி, சிபிஐ அதிர்சசி, சிபிஎம் அதிர்ச்சி என்று செய்திகள் வெளியாகின.
சரியாக சொல்லவேண்டும் என்றால் திமுக கூட்டணி மகிழ்ச்சி கூட்டணி. அந்த கூட்டணி அதிர்ச்சி கூட்டணி.
நான் நம்பினேன் 80 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மண்ணிலே காலூன்றி இருக்கிற பொதுவுடைமை கட்சி தலைமை ஏற்று மூன்றாவது அணியை அமைக்கும் என்று. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், 8 ஆண்டுகள் கூட ஆகாமல் இருக்கிற ஒரு கட்சியிடம் போய், நீங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்று கோயம்பேட்டுக்கு நடையாய் நடந்தார்கள்.
கோயம்பேட்டில் என்ன செய்தார்கள் என்றால், அந்த அம்மாவுடைய உருவபொம்மையில் ஒரு பச்சை சேலையை உடுத்தி, அதற்கு மேல் நான் சொல்லுவது நாகரீகமாக இருக்காது. அவ்வளவு அநாகரிகமும் அளங்கோலமும் நடந்து முடிந்த பின்னர், அந்த அம்மா அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
நான் என்ன நினைக்கிறேன் என்றால், அரசியலுக்கு புதிதாக வந்தாலும் கோயம்பேட்டுக்காரருக்கு சரியாக புரிகிறது. என்ன செய்தால் அவர் பேச்சுவார்த்தைக்கு அழைப்பார் என்று தெரிகிறது. பாவம் நெடுக்காலமாக அரசியலிலே இருக்கும் அண்ணன் வைகோவுக்கு இது தெரியவில்லை. எனவே திமுக கூட்டணி வெற்றி கூட்டணி என்றார்.
இன்றைய பதிவுகள்...
- பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எதிராக போட்டியிடும் வே...
- காங்கிரஸ் பிரபலங்களை எதிர்க்கும் வேட்பாளர்கள்
- விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிடும் காங். வேட்பாளர...
- விஜய்... இந்த முறை வெறும் 'வாய்ஸ்' அடுத்த முறை முத...
- ரஜினியுடன் நடிக்க ரேகா கேட்ட சம்பளம் !
- கத்ரீனா விளம்பரம்... ஏஆர் ரஹ்மான் வழக்கு!
- பிருத்விராஜுக்கு ரகசிய திருமண நிச்சயதார்த்தம்!
- ரித்திக்கிடம் வில்லத்தனம் செய்ய டிப்ஸ் கேட்கும் ஆம...
- திமுகவின் கோடீஸ்வர வேட்பாளர்: சொத்து மதிப்பு ரூ. 1...
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்ப...
- காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
- தங்கபாலு மீது ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் புகார்: சோன...
- டாக்டர் சேதுராமனின் கட்சியை இரண்டாக 'உடைத்த' அழகிர...
- மச்சான் கன்னத்தில் அறைந்த விஜயகாந்த் ;பண்ருட்டியார...
- ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்தை எதிர்த்து போட்ட...
- அனுஷ்காவுக்கு வலை விரிக்கும் சிம்பு !
- கலைஞர் தொகுதியில் கலைஞர் தலைமையில் விஜயகாந்தை விள...
- என் மூடுக்கு தகுந்த மாதிரியான கணவர் வேணும் : அசின்...
- ஆடு, கோழி, பீடிகளை பறிமுதல் செய்யும் தேர்தல் ஆணையம...
- வாக்குக்கு காசு புதிய தந்திரம் :'அடகு வைங்க, அண்ணன...
- உதயநிதி பேசிய முதல் வசனம்!
- 2006 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பேர் டெபாசிட் இழந...
- அப்துல் கலாம் பற்றிய வதந்தியால் பரபரப்பு
- ஜெ. பிரச்சார வேனுக்கு ரகசிய பூஜை
No comments:
Post a Comment