குத்துப் பாட்டில் என்னுடன் ஜரீன் கான்தான் ஆட வேண்டும் என்று சல்மான் கான் பிடிவாதம் பிடிக்கிறாராம்.
கத்ரினா கைப் அத்தியாயம் முடிந்ததையடுத்து தற்போது 'வீர்' பட நாயகி ஜரீன் கானை பிரபலமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் நடிகர் சல்மான் கான்.
ரெடி படத்தில் சல்மானும், ஜரீனும் சேர்ந்து கேரக்டர் தீலா... என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர். அதில் அவர்கள் ஜோடிப் பொருத்தம் அருமையாக உள்ளதென்று உடனிருப்பவர்கள் கூற, அதையே பிடித்துக்கொண்டாராம் மனிதர்.
இந்த பாடலில் முதலில் இலங்கை அழகி ஜாக்குலின் பெர்னான்டஸ் ஆடுவதாக இருந்ததாம். 'ஆடினால் நான் ஜரீன் கானுடன் தான் ஆடுவேன்' என்று சல்லு ஆர்டர் போட்டதால் ஜாக்குலின் நீக்கப்பட்டார். கால்ஷீட் பிரச்சனை என்று கூறி சமாளித்துவிட்டனர்.
'சல்மான் சொன்னால் சொன்னதுதான். அவருடன் யார் வாக்குவாதம் செய்ய முடியும். அதனால் ஜரீனையே ஆடவைத்தாகிவிட்டது. சல்லு எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்,' என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தார் யூனிட்டைச் சேர்ந்த ஒருவர்.
ஜரீன் மீது சல்மானுக்கு தனிப்பட்ட அக்கறையும் உண்டாம்!!
சல்லுவுக்கு இளகுன மனசு... பெண்கள் விஷயத்தில் அது இன்னும் கொஞ்சம் அதிகம்!
No comments:
Post a Comment