அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்ததாக ஏப்ரல் பூல் செய்தி வெளியிடப்பட்டதற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலில் எமது இயக்கத்தை பற்றியும், என்னைப் பற்றியும் கடுமையான விமர்சனங்கள் ஏடுகளில், ஊடகங்களில் வந்தாலும் அவற்றை ஜனநாயக பண்போடு தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்று இருக்கிறோம். எவ்வளவோ கடுமையாக நாம் காயப்படுத்தப்பட்ட நேரங்களிலும், ஆத்திரத்துக்கு கிஞ்சிற்றும் இடம் கொடுத்தது இல்லை.
இந் நிலையில் நாளிதழ் ஒன்றில் இன்றைக்கு மதிமுக தலைமை, அதிமுக தலைமையை சந்தித்துப் பேசியதாக குறிப்பிட்டு தேர்தல் களம் என்ற தலைப்பில் பிரதானமாக வெளியிடப்பட்ட செய்திக்கு உள்ளே ஏழாம் பக்கத்தில் உண்மை என்ன? என்று கூறி, நான்கு வரிகளில் இது ஏப்ரல் முதல்நாள் செய்தி என குறிப்பிட்டுள்ளது.
வேடிக்கையாக பொய்களை சொல்லி, பிறரை முட்டாளாக்கும் வேலை ஏப்ரல் முதல் நாள் நடைபெறும் என்றும், மேற்கு நாடுகளில் பகுத்தறிவுக்கு பொருந்தாத ஒரு வழக்கம் இருக்கிறது. அனல் வீசும் தேர்தல் களத்தில் தமிழகம் இருக்கின்ற நிலையில், மதிமுகவைப் பற்றி, இப்படி ஒரு செய்தி வெளியிட்டது நியாயமான கோபத்தையும், வேதனையையும் தோழர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
எத்தகைய விமர்சனங்களை எவர் நம் மீது கூறினாலும், சேற்றை வாரி இறைத்தாலும், அண்ணாவின் மணிவாசகத்தை கருதி, எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று முடிவு எடுத்த பின்னர் கழகம்தான் போட்டி இடவில்லையே, நாம் சுயேச்சையாக போட்டியிட்டால் என்ன என்று எண்ணி, ஒரு தொகுதியில் கூட கழகத் தோழர்கள் சுயேச்சையாக கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என்பது, வேறு பல கட்சிகளின் போட்டி வேட்பாளர்கள் களம் இறங்கும் சூழலில் மதிமுகவின் கட்டுப்பாடு இமயம் நிகர்த்தது என்று நாட்டு மக்களை சிந்திக்க வைத்து இருக்கிறது.
கழகத்துக்கு பெருமை தேடித் தந்த தோழர்களுக்கு, இயக்கம் காலமெல்லாம் கடமைப்பட்டு இருக்கின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதற்கு இலக்கணமாக இயங்குவோம்!.
எனவே தோழர்கள் இதுகாறும் கடைப்பிடித்து வந்த கண்ணியமான அணுகுமுறைக்கு சிறிய சேதமும் ஏற்படாவாறு ஆத்திரத்தை வெளிக்காட்டும் எவ்வித செயலிலும் ஈடுபடக் கூடாது என வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
மீண்டும் மீண்டும் அழைக்கும் திமுக-ஆதரிப்பாரா வைகோ?:
இதற்கிடையே திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வைகோ தர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அழைப்பு விட ஆரம்பித்துள்ளனர் ராமதாஸ், திருமாவளவன், வீரமணி உள்ளிட்டோர்.
அதிமுக கூட்டணியிலிருந்து வைகோ வெளியில் வந்ததும் முதல்வர் கருணாநிதியும் மறைமுகமாக, 'இந்திரஜித்தனே வருக' என்று அழைத்துவிட்டார். ஆனால் மதிமுக தனது தேர்தல் புறக்கணிப்பு முடிவை அறிவித்துவிட்டு அமைதியாக உள்ளது.
அதேநேரம் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து மதிமுக விலகி உள்ள போதிலும் மதிமுக தொண்டர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி வைகோ எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனாலும் பல்வேறு தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவாக மதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். சில மாவட்டங்களில், திமுகவுக்கு ஆதரவளிப்போம் என்று பகிரங்கமாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, வேலை பார்க்க ஆரம்பித்துள்ளனர் மதிமுகவினர்.
குறிப்பாக மதிமுக பலமாக உள்ள கொங்கு மண்டலத்தில் திமுக- கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுக்காக மதிமுகவினர் ஓசையின்றி பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் மதிமுக ஆதரவு வாக்காளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான அறிவிப்பை அடுத்த வாரம் வைகோ வெளியிடுவார் என்று தெரிய வந்துள்ளது.

No comments:
Post a Comment