தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதியில் தே.மு.திக. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதாரித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் திறந்த வேனில் நின்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
தமிழக முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஆகியவை எல்லாம் பிரச்சனையாக தொìயவில்லை. இப்போதைக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குதான் பிரச்சனை.
கருணாநிதி சொல்வார் ஆனால் செய்யமாட்டார். தமிழக அரசுக்கு 1 லட்சம் கோடி கடன் வைத்திருக்கும் இவர் முதல்வராப கருணாநிதிக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. இந்த சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து நிற்க வேண்டும். மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என எத்தனையோ வேலைகளை செய்தார்.
அதற்காக உளவுத்துறையையும் பயன் படுத்தினார். கோவையில் கருணாநிதி பேசியபோது மீண்டும் முதல்வரானால் பால் கொள்முதலுக்கு மானியம் வழங்குவேன் என்று கூறியுள்ளார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சேவை செய்ய முடியவில்லையாப.
ஈரோட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்று வேன் என வாக்குறுதி அளித்தார். திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சனை கருணாநிதி தன் கனவிலும் நனவிலும் உறுத்திக் கொண்டு இருக்கிறது என்றார். ஆனால் அந்த தொழிலை நம்பி இருக்கும் மக்களுக்கு என்ன செய்தார்ப தற்போது ஏழைகளுக்கு இலவசம் தொடரும் என்று கூறியுள்ளார்.
மக்களே உங்களிடம் நான் ஒன்று சொல்கிறேன். அவர் இருக்கும் வரை ஏழைகள் தொடர்வார்கள். கருணாநிதி ஆட்சி திரும்பவும் வராமல் இருப்பதற்கு எந்த தியாகமும் செய்வேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முத்துச்சாமி பற்றி எனக்கு நன்றாக தொìயும். 5 நிமிடத்திற்கு ஒரு முறை புத்தி மாறக்கூடியவர்.
வீண் கவுரவத்திற்கு மக்கள் ஓட்டு போட மாட்டாரர்கள். எம்.ஜி.ஆர். போட்ட பிச்சையில் வந்தவர் முத்துச்சாமி. எம்.ஜி.ஆர்.அவரை அறிமுகப்படுத்தினார்.
அ.தி.மு.க. வில் பணம் சம்பாதித்து விட்டு தற்போது தி.மு.க.வில் சேர்ந்து விட்டார். எம்.ஜி.ஆருக்கு துரோகம் செய்து விட்டார்.எனவே சந்திரகுமாருக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. கூட்டணியை வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment