தனிப்பட்ட காரணங்களுக்காக தான் ஹீரோவாக நடித்த காதல் ஜாதி படத்தை நிறுத்தி வைத்திருக்கிறார் இயக்குநர் கஸ்தூரிராஜா என குற்றம்சாட்டியுள்ளார் நடிகர் உதயா.
தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பனின் மகன் உதயா. இவரது தம்பிதான் மதராசப்பட்டினம் இயக்குநர் விஜய்.
கலகலப்பு, திருநெல்வேலி உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார் உதயா. அந்த காலகட்டத்தில் அவர் நடித்த படம்தான் காதல் ஜாதி. கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். இளையராஜா இசையில் பாடல்கள் ஹிட்டாகியிருந்தன.
ஆனால் படம் வெளியாகவில்லை.
இதுகுறித்து உதயா கூறுகையில், "இதைப் போய் யாரிடம் சொல்வதென்றே தெரியவில்லை. காதல் ஜாதி படத்தில் அத்தனைப் பாடல்களும் சூப்பர் ஹிட். ராஜா சார் அருமையாக இசையமைத்துக் கொடுத்தார். ஆனால் இயக்குநர் கஸ்தூரி ராஜா தனது சொந்க் காரணங்களுக்காக படத்தை நிறுத்தி வைத்துள்ளார். இந்தப் படம் வந்தால் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்" என்றார்.
இப்போது ராரா என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார் உதயா.

No comments:
Post a Comment