ஆத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளரை பாமகவினர் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் அருகே வீரகனூரைச் சேர்ந்தவர் சுந்தர் (42). விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாநில துணை செயலாளராக உள்ளார்.
கடந்த வாரம் வீரகனூர் பேருந்து நிலையத்தில் வைத்து விடுதலை சிறுத்தைகளுக்கும், பாமகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த பிரச்சனைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் சுந்தர் தான் காரணம் என்று பாமகவினர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில், தனது பைக்கில் ஆத்தூரில் இருந்து வீரகனூர் நோக்கி சென்ற சுந்தரை பாமகவினர் வழிமறித்து அவரை தாக்கினர். பின்பு சுந்தரை தொடவூர் மாரியம்மன் கோவிலில் கட்டி வைத்து, அடித்து உதைத்தனர்.
தகவல் அறிந்த கெங்கவல்லி எஸ்.ஐ. அன்பரசன் சுந்தரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.

No comments:
Post a Comment