முதல் அமைச்சர் கனவோடு அரசியலுக்கு வரும் நடிகர்களை மக்கள் தூக்கி எரிய வேண்டும் என, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
விஜயகாந்த்தின் பேச்சையும், செயல்பாடுகளையும் மக்கள் ரசிக்க மாட்டார்கள். முதல் அமைச்சர் கனவோடு அரசியலுக்கு வரும் நடிகர்களை மக்கள் தூக்கி எரிய வேண்டும். விஜயகாந்த் வேட்பாளரை அடிக்கவில்லை என்று அறிக்கை விட்ட அதே நாளில், தனது தொண்டரை அடிக்க உரிமை உள்ளது என்று விஜயகாந்த் கூறியுள்ளார். விஜயகாந்த்துக்கும், அவரது மனைவிக்கும் வேறுபாடு உள்ளது என்பதை இது காட்டுகிறது.

No comments:
Post a Comment