நாடாளுவதற்கு ஒரு தகுதி வேண்டாமா? அசினை பற்றியும் ,நமிதாவை பற்றியும் தெரிந்தால் போதும் நாடாளுவதற்கு என்று நினைக்கிறார் விஜயகாந்த் என, திருமாவளவன் பேசினார்.
ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிடும் திட்டக்குடி விடுதலைச்சிறுத்தைகள் வேட்பாளர் மா.செ.சிந்தனை செல்வனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றாலே மெழுகுவர்த்தி என்று தான் பொருள். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு உழைத்த உழைப்பிக்கு கிடைத்த அங்கீகாரம் தான் மெழுகுவர்த்தி சின்னம்.
விஜயகாந்த் இங்கு பிரச்சாரம் செய்யும் பொழுது திருமாவளவன் அடி என்று வன்முறையை துண்டுகிறார் என்று சொன்னாராம்? நான் அடி என்று சொல்லவில்லை திருப்பி அடி என்று தான் சொன்னேன். அது தலித் மக்களுக்கு மட்டும் பொருந்தாது சமூகத்தில் வஞ்சிக்கப்பட்ட அனைத்து சமூகத்திற்கும் பொருந்தும். காந்தி அடிகள் கூட பெண்களை நகங்களை வளருங்கள் என்று சொன்னார் அவர்களின் பாதுகாப்புகாக இந்த வரலாறு எல்லாம் தெரியாது தள்ளாடும் தலைவருக்கு.
நாடாளுவதற்கு ஒரு தகுதி வேண்டாமா? தள்ளாடும் தலைவருக்கு ஈழத்தை பற்றி ஒரு நிமிடம் பேசதெரியுமா, அம்பேத்கர், பெரியார், அய்யோதிதாசர், ரெட்டைமலை சீனிவாசன் இவர்களின் வரலாறு தெரியுமா. இதுவெல்லாம் தெரியாமல் அசினை பற்றியும் ,நமிதாவை பற்றியும் தெரிந்தால் போதும் நாடாளுவதற்கு என்று நினைக்கிறார். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

No comments:
Post a Comment