பள்ளி செல்லும் வயதிலேயே தனக்கு ஒரு பாய் பிரண்ட் வேண்டும் என்று நினைக்கும் மாணவிகளின் புதிய கலாச்சாரத்தை படமாக எடுத்து வருகிறார் வெற்றி டைரக்டர் பாலாஜி சக்திவேல். ஏற்கனவே காதல் கல்லூரி படங்களில் புதுமுகங்களை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டிருக்கும் பாலாஜி சக்திவேல் வழக்கு எண் 18/9 என்ற பெயரில் புதிய படத்தை இயக்கி வருகிறார். புதிய படம் குறித்து அவர் கூறுகையில், இந்தப் படம் ஒரு ‘டீன்ஏஜ் திரில்லர்’ படமாகும். நான் இயக்கிய இரண்டு படங்களுமே சங்கர் சார்தான் தயாரித்தார். இந்தப் படத்தினை லிங்குசாமி தயாரிக்கிறார். பள்ளி செல்லும் பெண்களிடையே பரவும் பாய் பிரண்ட் கலாச்சாரம் பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் இப்படத்தில் அலசியிருக்கிறேன். எனது முந்தைய படங்களைப் போல், இப்படத்திலும் புதிய முகங்களை நடிக்க வைத்திருக்கிறேன்.
கதாநாயாகியாக நடிக்கும் அஸ்ஸாமை சேர்ந்த ஊர்மிளா, பூனே திரைப்படக் கல்லூரி மாணவி, மற்றொரு நாயகியான மனீஷா பெங்களூரைச் சேர்ந்தவர். கதாநாயகர்களாக நடிக்கும் மிதுன் மற்றும் ஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களின் மிதுன் கேரளாவை சேர்ந்தவர். ஸ்ரீ சென்னையை சேர்ந்தவர். இப்படத்தின் கிளைமாக்ஸை ஒரு பரபரப்பு செய்தியின் மையமாக வைத்து எடுத்துள்ளேன். அது எந்த செய்தி என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். ரசிகர்கள் படம் பார்த்து தெரிந்து கொள்வார்கள், என்றார்.
No comments:
Post a Comment