சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் போனில் பேசியதாகவும், அவர் தன்னை வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் பாஜக தலைவர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகளையுமே சமமான தூரத்தில் வைத்துள்ளார் ரஜினிகாந்த். அனைவருடனும் நட்பு பாராட்டுகிறார். ஆனால் ஒவ்வொரு கட்சியும் எப்படியாவது அவருக்குள்ள பலமான ஓட்டு வங்கியை தங்கள் பக்கம் கொண்டு வர முடியாதா என்று துடிக்கின்றன.
அவருடன் போட்டோ எடுத்துக் கொள்வது, போனில் பேசுவதைக் கூட முடிந்தவரை பிரபலப்படுத்துகிறார்கள்.
தமிழக தேர்தலில் வெவ்வேறு தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்கள் கூட ரஜினியின் வீட்டுக்குப் போய் வாழ்த்துப் பெறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். முக ஸ்டாலினாக இருந்தாலும் சரி, பாஜக வேட்பாளராக இருந்தாலும் சரி... யாரும் இந்த வாய்ப்பை விட்டுவிடுவதில்லை.
இப்போது பாஜக தலைவர் நிதின் கட்காரியும் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார். பாஜகவின் தலைமை அலுவலகத்திலிருந்து ரஜினியை தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார்.
பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு, பிரச்சாரத்துக்காக மதுரைக்குச் செல்வதாக கட்காரி கூறினாராம். உடனே, வீட்டுக்கு வருமாறு ரஜினி அழைப்பு விடுத்தாராம்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கட்காரி, 'சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தொலைபேசியில் பேசினேன். உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தின் போது, கூட்டத்தில் சிக்கிக் கொண்ட ரஜினியையும் அவரது குடும்பத்தினரையும் என் வீட்டுக்கு அழைத்துப் போய் தேனீர் விருந்தளித்தேன். அப்போது தனது வீட்டுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார் ரஜினி. அந்த அழைப்பை இப்போது அவர் நினைவூட்டினார்," என்றார் கட்காரி.

No comments:
Post a Comment