சூட்டிங், சூட்டிங் என்று தொடர்ந்து ஓய்வில்லாமல் உழைத்து கொண்டு இருக்கும் தனஷ், "வேங்கை" படத்தை முடித்த கையோடு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கும் "இரண்டாம் உலகம்" படத்தை தொடங்கிவிட்டார்.
உத்தமபுத்திரன் படத்தில் தொடங்கி தொடர்ந்து ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை என்று வரிசையாக படங்களை கொடுத்து கொண்டே இருக்கும் தனுஷ், அடுத்து ஹரி இயக்கத்தில் "வேங்கை" என்ற படத்தில் நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன்னர் தான் மலேசியாவில் நடந்த சூட்டிங்குடன் இப்படம் முடிவடைந்தது. அதிரடி கலந்து கமர்சியல் படமாக உருவாகியிருக்கும் வேங்கை படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக தமன்னா நடித்து இருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் வேங்கை படத்தை முடித்த கையோடு சிறிதும் ஓய்வின்றி தனது அடுத்தபடமான இரண்டாம் உலகம் படத்தை தொடங்கிவிட்டார் தனுஷ். இப்படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குகிறார். தனுஷ்க்கு ஜோடியாக ஆண்டிரியா நடிக்கிறார். தற்போது கேரள மாநிலம், கண்ணூரில் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தனுஷ் தொடர்ந்து ஓய்வில்லாமல் சூட்டிங், சூட்டிங் என்று உழைத்து வருவதை பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.

No comments:
Post a Comment