தமிழ் சினிமா மிகவும் வசதியானது. நிறைய வித்தியாசமான முயற்சிகளுக்கு இடம் கொடுப்பது. அதில் நானும் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன், என்கிறார் காவ்யா மாதவன்.
பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன். தமிழில் காசி, சாது மிரண்டால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் விஷால் சந்திரா என்பவருக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்தனர்.
தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 'சைனாடவுன்' ஆகிய மலையாளப் படங்களிலும் 'தம்பித் துரை' என்ற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.
தனது மறுபிரவேசம் குறித்து அவர் கூறுகையில், "கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே எனக்கு விருப்பம் அதிகம். அதுபோன்ற படங்களில்தான் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த முடியும்.
எல்லா நடிகைகளுமே இதுமாதிரி படங்களில் நடிக்கத்தான் ஆர்வமாக உள்ளனர். சினிமாவை விட்டு 6 மாதங்கள்தான் விலகி இருந்தேன். இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளேன். நிறைய கதாநாயகிகள் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவே விரும்புகின்றனர். காரணம் இங்குதான் நிறைய வித்தியாசமான முயற்சிகள் நடக்கின்றன.
மலையாளத்தில் நடித்தாலும் நானும் தமிழ் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கிறேன். எனக்கும் தமிழில் நடிப்பது வசதியாக உள்ளது. இங்குள்ள ரசிகர்கள் ரொம்ப அன்பானவர்கள்," என்றார்.
பின்னே, கோயில் கட்டி அழகு பார்க்கும் ரசிகர்களாச்சே!

No comments:
Post a Comment