பழனி தொகுதி அ.தி. மு.க. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து நேற்று இரவு 9.30 மணிக்கு பழனி பஸ் நிலையம் ரவுண்டானா முன்பு திறந்த வேனில் இருந்தபடியே விஜய்காந்த் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், ’’ அ.தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்புகளை லயோலா கல்லூரி, மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. கருத்து கணிப்புகளை பார்த்த கருணாநிதிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
அந்த கருத்து கணிப்புகளில் அ.தி.மு.க.கூட்டணிக்கு 45 சதவீதமும், தி.மு.க. கூட்டணிக்கு 41 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆங்கில தனியார் தொலைக்காட்சிகளிலும் அ.தி.மு.க.கூட்டணிக்கு 164 முதல் 180 இடங்கள் கிடைக்கும் என கூறியுள்ளது.
அதிமுக கூட்டணிக்கு 58 சதவீத மக்கள் ஆதரவு உள்ளது. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் தந்தைக்கும், பழனி தொகுதியில் மகனுக்கும் சீட்டு வழங் கப்பட்டு உள்ளது.
பழனியில் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் படித்தவர்கள் இல்லையா? தமிழகத்தில் தற்போது குடும்ப அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. எனவே வருகிற தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடாது.
கடந்த சில நாட்களாக நான் தப்பு செய்வதாக தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பானது. இது தவறானது. கருணாநிதி தனது குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இது தமிழ்நாடா? அல்லது கலைஞர் வீடா? என வருகிற 13-ந்தேதி மக்கள் முடிவு செய்வார்கள்’’ என்று பேசினார்.
No comments:
Post a Comment