உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியப் பந்து வீச்சில் திக்கித் திணறி ஆடி வரும் இலங்கை அணி, 3 வது விக்கெட்டையும் இழந்தது. 36 ஓவர்களில் அந்த அணி 168 ரன்களை எடுத்துள்ளது.
ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே இந்தியப் பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். முதல் இரு விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் வீழ்ந்துவிட்டதால், நிதானமாக ஆடிய கேப்டன் சங்கக்கராவும், மஹேல ஜெயவர்தனாவும், வீழ்ச்சியிலிருந்து அணியை மெல்ல மெல்ல மீட்க முயன்றனர்.
குறிப்பாக மஹேல ஜெயவர்த்தன 30 பந்துகளில் 30 ரன்களை அடித்து அணியின் ஸ்கோர் மூன்று இலக்கங்களைக் கடக்க உதவினார்.
ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பத்தாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் இந்திய இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸில் வென்ற இலங்கை அணி கேப்டன் குமார் சங்கக்கரா, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியாவின் ஜாஹீர் கான் பந்து வீச்சைத் துவங்கினார். முதல் ஓவரை அசத்தலாக வீசினார். அதில் இலங்கை அணிக்கு இரு உபரி ரன்கள் மட்டுமே கிடைத்தன. அந்த ஓவர் மெய்டனாக அமைந்தது.
அடுத்த ஓவரை ஸ்ரீசாந்த் வீசினார். அதில் மூன்று ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது இலங்கை வீரர்களால்.
ஜாஹீர்கான் வீசிய இரண்டாவது மற்றும் மூன்றாவது ஓவர்களும் மெய்டன் ஓவர்களாகவே அமைந்தது. 5 வது ஓவர் வரை இலங்கை அணி வெறும் 9 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஜாகீன்கான் வீசிய மூன்று ஓவர்களிலும் இலங்கையின் துவக்க வீரர்களால் ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை.
ஆனால் ஸ்ரீசாந்த் வீசிய 6 வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார் தில்ஷன்.
ஆனால் 7 வது ஓவரில் ஜாகீர் கான் பந்தில் ஆட்டமிழந்தார் உபுல் தரங்க. அவர் அடித்த பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்தார் வீரேந்திர சேவாக். 14 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது இலங்கை.
தில்ஷன் 38 ரன்களும், சங்கக்கரா 17 ரன்களும் எடுத்துள்ளனர்.
தில்ஷன் அவுட்
அடுத்து ஹர்பஜனை அழைத்தார் டோணி. அவரது இந்த யுத்தி உடனடி பலன் கொடுத்தது. ஹர்பஜன் வீசிய இரண்டாவது ஓவரில் க்ளீன் போல்டாகி வெளியேறினார் தில்ஷன். அவர் 49 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 33 ரன்களை எடுத்தார்.
19 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இலங்கை அணி 77 ரன்களை எடுத்துள்ளது. ஹர்பஜனின் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார், நான்காவது விக்கெட்டுக்கு ஆட வந்த மஹேல ஜெயவர்த்தன.
இவரும் சங்கக்கராவும் உறுதியாக விளையாடி, இலங்கை 100 ரன்களைக் கடக்க உதவினர்.
இந்திய அணிக்கு உடனடியாக ஒரு விக்கெட் தேவை என்பதால் யுவராஜ் சிங் பந்து வீச அழைக்கப்பட்டார். அவரது முதல் ஓவரில் 8 ரன்கள் அடித்தனர்.
சங்கக்கரா அவுட்
தனது இரண்டாவது ஓவரிலேயே சங்கக்கராவை காலி செய்தார் யுவராஜ். 67 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த சங்கக்கரா, யுவராஜின் பந்தை அடிக்க முயல அது பேட்டில் பட்டு, டோணியிடம் கேட்ச் ஆனது.
இலங்கை மூன்று விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்துள்ளது.
துன்பக் கடலில் துவளும் இந்தியா!
ReplyDeleteஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html