திருப்பூரில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் செய்தார். திறந்த வேனில் நின்றபடி அவர் பேசியதாவது:-
சாய, சலவைப்பட்டறை பிரச்சினையால் திருப்பூரில் உள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வுகாண வில்லை. சாயப்பட்டறைகளுக்கு ரூ.300 கோடி மானியமாக கொடுப்பதாக கூறினார்கள். ஆனால் அந்த மானியம் இதுவரை முறையாக சென்று சேரவில்லை. இப்போது தேர்தல் வந்ததும் சாயகழிவுநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கருணாநிதி கூறுகிறார். இது ஏமாற்று வேலை என்பதை மக்கள் உணர வேண்டும்.
தவறு செய்தால் எனக்கு கோபம் வரும். பள்ளிக்கு செல்லாமல் குழந்தைகள் அடம் பிடித்தால் தாய் அந்த குழந்தையை அடிக்கமாட்டாரா? தவறு செய்பவர்களை கன்டித்தேன். விஜயகாந்தை சமாளிக்க முடியாமல் ஏதேதோ பரப்பி வருகிறார்கள். இவ்வாறு செய்வதால் எனது புகழ் கூடத்தான் செய்யும். அதைப்பற்றி கவலைப்படுபவன் நான் அல்ல. பணத்துக்கு ஆசைப்பட்டு இருந்தால் நான் எங்கோ சென்றிருப்பேன்.
என் மானசீககுரு எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியுடன் நான் இப்போது கூட்டணி வைத்து உள்ளேன். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான் தமிழகத்தின் முதல் -அமைச்சர். இதற்காக அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment