தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து கலைஞருக்கு புகழாரம் செய்துள்ளார் ஜெயலலிதா என, கார்த்தி சிதம்பரம் பேசினார்.
விருத்தாசலத்தில் தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தில் நடந்தது. அப்போது வேட்பாளர் நீதிராஜனை ஆதரித்து பேசிய கார்த்தி சிதம்பரம் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம்,
மக்களின் தேவைகளை அறிந்து தேர்தல் அறிக்கை தயாரித்தவர் கலைஞர். அவரது அறிக்கையை காப்பி அடித்து கலைஞருக்கு புகழாரம் செய்துள்ளார் ஜெயலலிதா. இலவசங்களை ஏளனம் செய்தவர், இன்று அவரே இலவசங்கள் வழங்கப்படும் என கூறியிருக்கிறார்.
மத்திய அரசோடு தி.மு.க., இணக்கமான அரசாக உள்ளது. இதனால் மக்களுக்கு பல திட்டங்கள் செய்து வருகிறோம். தி.மு.க., காங்., கூட்டணி கடந்த மூன்று தேர்தல்களில் இணைந்து தேர்தலை சந்தித்துள்ளதால் ஹாட்ரிக் கூட்டணி ஆகும். எதிரணியினர் குழப்பமான, முரண்பாடான கூட்டணி. விஜயகாந்த் பேசும் எந்த ஒரு இடத்திலும் ஜெயலலிதாவை முதல்வராக்குவேன் என பேசவில்லை. இதிலிருந்தே அவர்களது முரண்பாடு தெளிவாகிறது என்றார்.
No comments:
Post a Comment