சசிகுமாரின் "சுப்ரமணியபுரம்" படத்தின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சுவாதி, இப்போது மீண்டும் சசிகுமாருடன் "போராளி" படத்தில் நடிக்க இருக்கிறார். "நாடோடிகள்" படத்தை தொடர்ந்து டைரக்டர் சமுத்திரகனி இயக்கும் படம் "போராளி". இப்படத்தின் ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தில் "அங்காடித்தெரு" புகழ் அஞ்சலி நடிப்பதாக இருந்தது. ஆனால் அஞ்சலிக்கும், டைரக்டர் சமுத்திரகனிக்கும் இடையே ஏற்பட்ட சில பல பிரச்சனைகளால் இப்படத்தில் இருந்து அஞ்சலி நீக்கப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து யாரை நடிக்க வைக்கலாம் என்று எண்ணியபோது சுவாதியை நடிக்க வைக்க சிபாரிசு செய்திருக்கிறார் சசி. இதனிடையே படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் சுவாதி என்பது உறுதியாகிவிட்டநிலையில், மற்ற இரண்டு நாயகிகளுக்கான தேடுதல் வேட்டை தொடர்கிறது.

No comments:
Post a Comment