சாய்பாபாவின் உடல் அருகே அமர்ந்து சச்சின் டெண்டுல்கர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
டெக்கான் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஹைதராபாதில் தங்கியிருந்த சச்சின், பாபாவின் மறைவு செய்தி கேட்டதும் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை என அவர் தங்கியிருந்த ஹோட்டல் வட்டாரம் தெரிவித்தது.
மிகுந்த சோகமடைந்த சச்சின் காலை உணவு கூட சாப்பிடவில்லை. அவரின் அறைக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை என ஹோட்டலின் மேலாளர் தெரிவித்தார்.
சாய் பாபாவின் மறைவைத் தொடர்ந்து உடனடியாக அவரது அறைக்கதவில் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. அப்போதிலிருந்தே அவர் தனது அணி வீரர்களைக் கூட சந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார். மும்பை அணியின் உரிமையாளர் டினா அம்பானி மட்டுமே சச்சினை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சாய்பாபாவின் உடலை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது தீவிர பக்தரான சச்சின் டெண்டுல்கர், மனைவியுடன் புட்டபர்த்தி வந்ததார். சாய்பாபாவின் உடல் அருகே அமர்ந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

No comments:
Post a Comment