தமிழில் வால்மீகி, அய்யனார் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா நந்தன். தற்போது சூரியநகரம் என்ற படத்தில் மாஸ்கோவின் காவிரி நாயகன் ராகுலுடன் நடித்து வருகிறார். இப்படத்தை செல்லமுத்து என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ளுமாறு நடிகை மீரா நந்தனுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. இருப்பினும் அவர் கலந்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் மீரா நந்தனுக்கு டைரக்டர் செல்லமுத்து தந்த அதிர்ச்சி தான் காரணமாம்.
சூட்டிங்கில் ஒருநாள் மீரா நந்தனிடம், ஐ லவ் யூ என்று கூறியிருக்கிறார் டைரக்டர் செல்லமுத்து. இதனால் அதிர்ச்சிக்குள்ளான மீரா நந்தன், நான் அந்தமாதிரி பெண் கிடையாது என்று கூறி சென்றுவிட்டார். செல்லமுத்துவின் இந்த செயலால் சிறிது அப்செட்டான மீரா நந்தன், தன்னால் சூட்டிங்கிற்கு எந்த பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து சூட்டிங்கில் கலந்து கொண்டு படத்தை முடித்து கொடுத்து இருக்கிறார். அதன் பின்னர் இவருக்கும் இயக்குனருக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் போனது. பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த போது மட்டும், அன்றைய தினத்தன்று எங்களுக்கு விசேஷமான நாள். ஆகையால் நான் வருவது சிரமம் என்று கூறிவிட்டாராம் மீராநந்தன்.

No comments:
Post a Comment