மறைந்த புட்டபர்த்தி சாய்பாபாவின் உடலுக்கு சாமியார் நித்தியானந்தா இன்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக அவரது மடம் தெரிவித்துள்ளது.
நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது போன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகி, அதன் பின்னர் தலைமறைவாகி, இமாச்சலப் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகியிருப்பவர் நித்தியானந்தா.
இந்த நிலையில் மறைந்த சத்ய சாய்பாபாவின் உடலுக்கு இன்று நித்தியானந்தா நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார். இதுகுறித்து அவரது பிடதி ஆசிரமம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
புட்டபர்த்தியில் மறைந்த சத்யசாய்பாபா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சுவாமி நித்யானந்தா செவ்வாய்க்கிழமை புட்டபர்த்தி செல்கிறார். அங்கு அவர் மறைந்த சத்ய சாய்பாபா உடலுக்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்துகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment