தங்களை கூட்டணியில் இருந்து விரட்டிய ஜெயலலிதாவை தேர்தலில் மக்கள் விரட்டியடிப்பார்கள் என, மதிமுக கொள்கைப்பரப்புச் செயலாளர் நாஞ்சில சம்பத் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் மதிமுக சார்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய நாஞ்சில் சம்பத்,
நாங்கள் உழைப்பை தந்தோம். உதிரத்தை தந்தோம். மதிமுகவின் உழைப்பை, உதிரத்தை எல்லாம் உறிஞ்சி உண்டு கொழுத்து, கழுத்து வரை கொழுத்து திரிந்து, கடைசி நேரத்தில் எங்களை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினால், உன்னை வெளியே தள்ளுகிற வலுமை வைகோவின் சகாக்களுக்கு உண்டு.
அதிமுக மேடையில் எம்ஜிஆரை புகழ முடியாத நிலை உள்ளது. போராட்ட களத்தில் துணை நின்ற மதிமுகவினரை வெளியேற்றிவிட்டு, உருவபொம்மையை எரித்தவர்களை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளார். தேர்தலில் மதிமுகவினர் துரோகத்தை வீழ்த்துவார்கள் என்றார்.

No comments:
Post a Comment