தனுஷ்-ஆண்டிரியா நடிப்பில், டைரக்டர் செல்வராகவன் இயக்கி வரும் இரண்டாம் உலகம் படத்திலிருந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திடீரென விலகினார். யுவனுக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட செல்வராகவனின் படங்களுக்கு இசையமைப்பாளராக யுவன் தான் பணியாற்றி வந்தார். ஆனால் ஏனோ சில காரணங்களால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் "ஆயிரத்தில் ஒருவன்" படத்திற்கு யுவன் பதிலாக ஜி.வி.பிரகாஷ் குமாரை இசையமைக்க வைத்தார் செல்வா. இந்நிலையில் செல்வாவுக்கும், யுவனுக்கு இடையே சமாதானம் ஆனது. இதனையடுத்து மீண்டும் யுவன் சங்கர் ராஜாவை தன்னுடைய அடுத்தபடமான "இரண்டாம் உலகம்" படத்திற்கு இசையமைக்க அழைத்தார் செல்வா. அவரும் ஓ.கே., சொல்லி மியூசிக் கம்போசிங் வேலையை தொடங்கினார்.
இதனிடையே "இரண்டாம் உலகம்" படத்திற்கு அடுத்து கமலை வைத்து "விஸ்வரூபம்" என்ற படத்தை எடுக்க இருக்கிறார் செல்வா. இந்தபடத்திற்கும் யுவன் தான் இசையமைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் எடுக்க இருப்பதால் யுவனுக்கு பதிலாக சங்கர் மகாதேவன் தான் சரியாக இருப்பார் என்று எண்ணிய செல்வா அவரை ஓ.கே. செய்தார். இதனால் கமலுடன், சேர்ந்து யுவன் பணியாற்றும் வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில் இரண்டாம் உலகம் படத்தின் பட்ஜெட் அதிகரிக்க, யுவனிடம் போய் தங்களுடைய சம்பளத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறார் செல்வா. ஏற்கனவே கமலுடன் பணியாற்ற முடியாமல் போன வருத்தம், இப்போது சம்பளத்தை குறைக்கும்படி கூறியது போன்ற பிரச்சனைகளால் இரண்டாம் உலகம் படத்திலிருந்து சத்தமில்லாமல் விலகிகொண்டார் யுவன்.
யுவன் விலகியதையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த செல்வாவுக்கு ஜி.வி.பிரகாஷ் நியாயம் வந்தது. ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவர் இசையமைத்தால் அவரிடம் அனுகியிருக்கிறார் செல்வா. ஜி.வி.பிரகாஷூம் மறுக்காமல் ஓ.கே., சொல்லிவிட்டார். இப்போது ஜி.வி.பிரகாஷ்யை வைத்து "இரண்டாம் உலகம்" படத்தின் பாடல் கம்போசிங் வேலை மும்மரமாக நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment