கன்னட சினிமா தயாரிப்பாளர் மதன் பட்டேல் சத்யானந்தா என்ற பெயரில் சினிமா படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ரவிசேத்தன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தை எதிர்த்து நித்யானந்தா சார்பில் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது. அதில் சத்தியானந்தா படத்தில் நித்தியானந்தாவை தவறாக சித்தரி்த்து
காட்டியிருப்பதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மதேன் பட்டேல் தயாரித்து வரும் சத்யானந்தா
படத்துக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், வழக்கு விசாரணையை வருகிற
23.4.2011 அன்றைய தினத்திற்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதன்படி கடந்த சனிக்கிழமை அன்று தயாரிப்பாளர் மதன்பட்டேல், படத்தில் நடித்துள்ள நடிகர்
ரவிசேத்தன் ஆகியோர் நேரில் ஆஜராகி, ‘’நித்யானந்தா வாழ்க்கை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது.
அவரை பற்றி கதையில் எந்த காட்சியும் வைக்கவில்லை. சத்யானந்தா என்று பெயர்
வைத்துள்ளதால் அவர்கள் சந்தேகப்படுக்கிறார்கள். எனவே எங்கள் படத்திற்கு விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்’’ என்று கேட்டனர்.
இதையடுத்து நித்யானந்தா தரப்பினரிடம் செய்த விசாரணைக்கு பிறகு சத்யானந்தா படத்திற்கு
விதிக்கபட்ட தடை நீடிக்கும் என்று உத்தரவிட்டார் நீதிபதி.
இதனால் விரக்தியடைந்த சதயானந்தா படக்குழுவினர், நிதியானந்தாவிற்கு ஆதாவாக கோர்ட் தீர்ப்பு கூறி வருகிறது என்று புலம்புகிறார்களாம்.

No comments:
Post a Comment