சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய் வீடு கடந்த சில நாட்களுக்கு முன் மர்ம நபர்களால் கல்வீசி தாக்கப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். விஜய் ரசிகர்கள் மாவட்டம் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தாக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், கோவை மாவட்ட விஜய் இளைஞர் நற்பணி இயக்கம் சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
செஞ்சிலுவை சங்கம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் அணி தலைவர் யுவராஜ் தலைமை தாங்கினார்.
கவிஞர் ரகுபதி, ராம்குமார், கஜேந்திரன், ஜெயகிருஷ்ணன், மணிகண்டன், காட்டூர் கணேஷ், காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விஜய் வீடு மீது கல்வீசி தாக்கியவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.

No comments:
Post a Comment