ரஜினியின் ராணா பட வேலைகள் படு ஜரூராக நடந்து வருகின்றன. இந்தப் படத்துக்காக அட்டகாசமான முறுக்கு மீசையுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார் சூப்பர் ஸ்டார்.
இந்த படத்துக்கான கதை கரு ரஜினியுடையது. கே.எஸ். ரவிக்குமாரும் ரஜினியும் இணைந்து திரைக்கதையை உருவாக்கி உள்ளனர்.
கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதை என்பதால் வரலாற்று கால அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. பெரும்பாலான காட்சிகளை லண்டனிலும் ஐரோப்பிய நாடுகளிலும் எடுக்கின்றனர்.
ரஜினியுடன் நடிக்க தீபிகா படுகோனே, இலியானா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளனர். தீபிகா படுகோனே இளம் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
ரஜினியுடன் நடிப்பதற்காகவே பிற படங்களின் கால்ஷீட் தீபிகா படுகோனே ஒதுக்கி கொடுத்துள்ளார். சரித்திர கால படம் என்பதால் பரத நாட்டியம், வஜ்ர முக்தி எனும் சண்டை மற்றும் சமஸ்கிருதம் கற்று வருகிறார்.
இப்படத்துக்கென சமீபத்தில் பிரத்யேக போட்டோ ஷ¨ட் நடத்தினர். ரஜினியையும் தீபிகா படுகோனேயையும் விதவிதமான புரதான ஆடைகளில் படம் பிடித்தனர். போட்டோக்கள் எடுத்த பிறகு படங்களை பார்த்த ரஜினிக்கு, அந்தப் படங்களில் தீபிகாவின் தோற்றத்தில் திருப்தி ஏற்படவில்லை.
மேக்கப் பொருத்தமாக இல்லை என்று கூறிய ரஜினி, தீபிகா படுகோனே தோற்றத்தை 17-ம் நூற்றாண்டு காலகட்டத்துக்கேற்ப மாற்றி, இந்தியத் தன்மைமிக்க அழகியாக்கும்படி மேக்கப் நிபுணர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.
ராணா படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராவதால் கதாநாயகி விஷயத்தில் மிகுந்த சிரத்தை எடுத்து வருகிறார்கள் ரஜினியும் இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரும்.

No comments:
Post a Comment