ஐஸ்வர்யாராயின் பெற்றோர் கிருஷ்ணராஜ் ராய், விரிந்தாராய் இருவரும் சாய்பாபாவின் அதி தீவிர பக்தர்களாவார்கள். சாய்பாபாவை அடிக்கடி சந்தித்து அவர்கள் ஆசி பெறுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.
கிருஷ்ணராஜ்ராய் - விரிந்தா தம்பதியருக்கு 1971-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி ஐஸ்வர்யாராய் பிறந்தார். சில நாட்களிலேயே ஐஸ்வர்யாராயை புட்டபர்த்திக்கு எடுத்துச் சென்றிருந்தனர். அங்கு தன் இருகைகளிலும் குழந்தையை வாங்கிக் கொண்ட சாய்பாபா, என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணராஜ்ராய், ஐஸ்வர்யா என்றார்.
உடனே சாய்பாபா புன்னகைத்தப்படி, குழந்தையின் காதில் மூன்று தடவை, ஐஸ்வர்யா என்று மெல்ல கூறி ஆசீர்வதித்தார். பிறகு அவர், இவள் செல்வத்துக்கு மட்டுமல்ல சர்வவல்லமை படைத்த கடவுளின் அன்புக் குரியவளும் ஆவாள் என்றார்.
சாய்பாபாவின் ஆசியால் மனம் நெகிழ்ந்த ஐஸ்வர் யாராயின் பெற்றோர் அடிக்கடி புட்டபர்த்தி வந்து ஆசி பெற்று செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
ஒரு தடவை சாய்பாபா மும்பைக்கு வந்திருந்த போது அவருக்கு மாலை அணிவிக்க ஒரு சிறுமியை தேடினார்கள். அப்போது அங்கு வந்த ஐஸ்வர்யா ராய்க்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
சாய் பாபாவுக்கு ஐஸ்வர்யா மாலை அணிவித்து வணங்கினார். அப்போது சாய்பாபா சிறுமி ஐஸ்வர்யா தலை மீது கை வைத்து ஆசீர்வதித்தார்.
இப்படி பல தடவை சாய்பாபாவிடம் ஆசி பெற்ற ஐஸ்வர்யா தன் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் போது சாய்பாபாவிடம் ஆசி வாங்க தவறியதே இல்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மும்பையில் உள்ள சாய்பாபா ஆசிரமத்துக்கு சென்று பஜனை பாடல்களில் ஐஸ்வர்யாராய் பங்கேற்பது உண்டு.

No comments:
Post a Comment