ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் இருந்து இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்று இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருந்தால், உலக அரங்கில் இந்தியாவுக்கு தீரா பழி ஏற்பட்டுவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை இனச்சிக்கலுக்கு காரணமாக அமைந்துள்ள பிரச்சனைகளை தீர்க்க இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மறையான விசாரணை நடத்தப்படவில்லை. இலங்கை அரசின் செயல்பாடுகள் எதுவுமே நம்பகத்தகுந்ததாக இல்லை என்றும் ஐ.நா. குழு கூறியுள்ளது. அவர்களுக்கு சம உரிமை வழங்கும் என்றோ எதிர்பார்த்து சூரியன் மேற்கே உதிக்கும் என்று எண்ணி காத்திருப்பதைப் போன்றதாகும். இனியும் இதற்காக காத்திருக்காமல் இலங்கை இனச்சிக்கலுக்கு ஓரே தீர்வு தனித் தமிழ் ஈழம் அமைத்துத் தருவதுதான் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.வும் உலக நாடுகளும் தொடங்க வேண்டும்.
பாகிஸ்தானுடன் இணைந்திருந்த கிழக்கு பாகிஸ்தானில் உள்ள மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத அன்னை இந்திரா காந்தி எப்படி கிழக்குப் பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனி நாட்டை ஏற்படுத்தித் தந்தாரோ, அதேபோல், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை பிரித்தெடுத்து தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான முன்முயற்சிகளை இந்தியா தொடங்க வேண்டும்.
ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் இருந்து இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்று இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருந்தால், உலக அரங்கில் இந்தியாவுக்கு தீரா பழி ஏற்பட்டுவிடும். தமிழர்களின் நலனிலும், இலங்கையை தண்டிப்பதிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையில் இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வணிக உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment